பிரதான செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்கு செல்ல திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹொன இதனை தெரிவித்துள்ளார்.

வர்த்தகம் முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட விடயங்களில் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக அவர் சீனாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறைக்கு உதவுமாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலும். அம்பாந்தோட்டையிலும் சீனாவின் ஆதரவுடன் கூடிய பரந்த துறைமுகத் திட்டங்களுக்கு மேலதிக முதலீட்டை மேற்கொள்வதன் மூலம் பீய்ஜிங், இலங்கைக்கு உதவ முடியும் என்று கொஹன தெரிவித்துள்ளார்.

சீனா தொடர்பில், புதிய அரசாங்கத்தின் கொள்கையில் எந்த அடிப்படை மாற்றமும் ஏற்படாது என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts

பங்களாதேஷ் நாட்டிற்கு பெறுமையினை பெற்றுக்கொடுத்த ருமானா அஹமது.

wpengine

கிண்ணியாவில் மனைவி, பிள்ளையை காப்பாற்றத் தவறிய சோகம்!

wpengine

100 வயதினை தாண்டியோருக்கு 5000ரூபா

wpengine