Breaking
Tue. Nov 26th, 2024
முக்கியமாக சந்தர்பங்களில் மௌனவிரதம் கடைபிடிக்கும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ அமைச்சர் ஹக்கீம் இன்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் மௌனவிரதம் இருந்துள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் சமகால முஸ்லிம்களின் விவகாரம் தொடர்பில் பா உறுப்பினர் முஜீப் ரஹ்மான் , அமைச்சர் ரிஷாத் , பா உறுப்பினர் இஷாக் றஹுமான் , அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்ப அங்கிருந்த ரவுப் ஹக்கீம் மவுன விரதம் இருந்ததாக குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

பொதுவாக பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேசும் விடயங்கள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சென்றடையும் என்பதில் எந்த வித உத்தரவாதமும் இல்லை என சுட்டிக்காட்டிய அவர் அவர்களுடன் நேரடியாக கதைக்கும் போது சில விடயங்களை முகத்தில் கேட்பது தான் சிறந்த வழி என குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

கூட்டு எதிர்கட்சியினால் பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள அனர்த்தம் தொடர்பான விவாதம் இன்று இடம்பெறவுள்ள நிலையில் நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில்  ஜனாதிபதி தலைமையில் ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்கான  விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்றைய தினம் இடம்பெற உள்ள விவாதம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ள அதேவேளை கலந்துரையாடலை முடித்துக்கொண்டு ஜனாதிபதி ஆசனத்தை விட்டு எழும்ப முயற்சித்த போது அங்கு குறுக்கிட்டுள்ள முஜீபுர் ரஹ்மான் எம் பி ஜனாதிபதியிடம் சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கி உள்ள அச்சநிலை தொடர்பிலும் சமகாலத்தில் வரத்தக நிலையங்கள் தாக்கப்படுவது தொடர்பிலும் நீண்ட விளக்கம் ஒன்றை அளித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.

ஒரு நாளைக்கு ஒரு முஸ்லிம் வர்த்தக நிலையம் என்ற ரீதியில் தாக்கப்படுவதாகவும் பொலிஸார் சட்டத்தை செய்யாமல் காலம் தாழ்த்துவதாகவும் அவர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.நல்லாட்சிக்கு மக்கள் வாக்களித்தமை இவை இடம்பெறாமல் இருக்கவே என கூறியுள்ள முஜிப் ரஹ்மான் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் நீங்கள் இந்த விடயத்தை மிகுந்த கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரியுள்ளார்.

அங்கு பதில் அளித்துள்ள ஜனாதிபதி பொலிஸாருக்கு சட்டத்தை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளோம் எனவும் அதையும் மீறி அவர்கள் காலம் தாழ்த்தினால் அவர்களின் இடத்துக்கு வேறு ஆட்களையாவது நியமித்து சட்டத்தை செய்யவேண்டும் என பதில் அளித்துள்ளார்.

இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என ஜனாதிபதி கேட்க மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு குழுவே இதை செய்வதாக முஜிப் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளபோது அதையும் நீங்கள் மக்களிடம் எடுத்து கூறுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது அங்கு குறுக்கிட்ட அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பிரபாகரனை கண்டுபிடித்த புலனாய்வு பிரிவால் ஏன் ஞானசார தேரரை கண்டுபிடித்து கைது செய்யமுடியவில்லை என மக்கள் கேட்கிறார்கள் எமக்கும் அது தொடர்பில் சந்தேகம் உள்ளது என ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்.

பிரபாகரனை  இருக்கும் இடத்தை கண்டு பிடித்தது ராணுவ புலனாய்வு பிரிவு அப்படியானால் இந்த விடயத்தை ராணுவ புலனாய்வு பிரிவிற்கு ஒப்படைப்போமென ஜனாதிபதி அமைச்சர் ரிஷாதுக்கு பதில் அளித்துள்ள அதேவேளை.

சமகால விடயங்கள் தொடர்பில் சீ சீ டி வி காட்சிகள் என பலதரப்பட்ட ஆதரங்கள் இருந்து எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என இஷாக் எம்பி ஜனாதிபதி முன்னிலையில் விசனம் வெளியிட்டுள்ளார்.

இந்த விடயங்கள் நடந்துகொண்டிருந்த போது மு கா தலைவர் அமைச்சர் ஹக்கீம் மௌன விரதம் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கலந்துரையாடலில் எட்டு முஸ்லிம் பா உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *