பிரதான செய்திகள்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒதுங்கி விட அனுரகுமார திஸாநாயக்க சீற்றம்

மத்திய வங்கி ஆளுனர் விவகாரத்தை கோப் குழுவிடம் ஒப்படைத்து விட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் இவ்விடயத்திலிருந்து ஒதுங்கி விட முனைவதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தினார். 

மத்தியவங்கியின் பினைமுறி விவகாரம் தொடர்பில் கோப் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துறைகளை அரசாங்கமானது நிறைவேற்ற வில்லை அதோடு தனிப்பட்ட முறையில் கோப் குழுவின் தலைவருடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படும் செய்திகளில் எவ்வித உண்மை தன்மைகளும் இல்லை இவ்விடயம் தொடர்பில் நாம் திரைமறைவில் எந்தவொறு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள வில்லை எனவும் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கட்சியின் தலைவரும் கொழும்ப மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

மன்னார் நகரில் சுய தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் திட்டம்- எம்.பிரதீப்

wpengine

பலர் தலைமறைவு இவர்களை கண்டுபிடியுங்கள்

wpengine

ஐ.பி.எல் விளையாடி வந்த கெய்லுக்கு திடீர் ஓய்வு கொடுத்த மகன்!

wpengine