பிரதான செய்திகள்

ஜனாதிபதி மற்றும் இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் ஜொன்ங் வூன்ஜின் இடையில் சந்திப்பு!

தனது பதவிக்காலத்தை நிறைவுசெய்த பின்னர் தாய் நாடு திரும்பும், இலங்கைக்கான தென்கொரிய தூதுவர், ஜொன்ங் வூன்ஜின் (Jeong Woonjin), ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

தான் நாடு திரும்புவதை ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்ததுடன், சிநேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

ஜொன்ங் வூன்ஜின் (Jeong Woonjin), தனது பதவிக்காலத்தில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவைப் பாராட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவரின் எதிர்கால பணிகள் வெற்றியடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.இந்நிகழ்வில் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜயவர்தனவும் கலந்துகொண்டார்.

ஜொன்ங் வூன்ஜின் 2020 ஜூலை 02ஆம் திகதி முதல் இலங்கைக்கான தென்கொரியத் தூதுவராகப் பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றத்தினால் மற்றுமொரு தடை உத்தரவு!

wpengine

சம்பந்தன் இருட்டில் தடவிக்கொண்டு முஸ்லிம் பெண்களை கேவலப்படுத்தியுள்ளார்.

wpengine

மின் தடை மெழுகுவர்த்தியால் வந்த விணை-வீட்டின் ஒரு பகுதி தீப்பிடித்து சேதம்-மட்டில் சம்பவம்

wpengine