ஜனாதிபதி பதவியேற்று 10 நாட்கள்தான். ஆனால் இன்று என்ன நடக்கிறது என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரள கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
18ஆம் திருத்தத்தின் மூலம் மகிந்த ராஜபக்ச தனக்காக ஏற்படுத்திக் கொண்ட சர்வ அதிகாரங்களை நாம் 2015ஆம் ஆண்டு 19ஆம் திருத்தத்தின் மூலம் குறைத்தோம்.
நிறைவேற்று அதிகாரங்களை குறைத்து அந்த அதிகாரங்களை நாம் நீதிமன்றுக்கு வழங்கினோம்.
சுயாதீன ஆணைக்குழுக்களை நாம் நிறுவியுள்ளோம். இலங்கை வரலாற்றில் தூய்மையான தேர்தல் 2019ஆம் ஆண்டே நடந்தது. நாம் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
2015ஆம் ஆண்டு நாம் ஓடி ஒழிந்து தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தோம். 19இல் திருத்தம் கொண்டு வந்து மீண்டும் அதிகாரங்களை கைப்பற்ற கூறுகிறார்கள். ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்.
நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஜனாதிபதிக்கு மக்கள் வாக்களித்தார்கள். இருந்தாலும் அவருக்கு எதிராக வாக்களித்த மக்களும் உள்ளார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்க நன்றாக தெரிந்திருக்கும் தற்போது நாட்டில் சுதந்திரம் பறிபோய் கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.