செய்திகள்பிரதான செய்திகள்

ஜனாதிபதி நிதியத்திற்கு 100 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கிய IOC நிறுவனம்..!

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின், இந்நாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இன்று (04) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்தார்.

இந்த நன்கொடை, லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் இலங்கையின் கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசார துறைகளுக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related posts

அரசியல் பாதுகாப்பின் மூலம் போதைப்பொருள் வியாபாரம்! அநுரகுமார திஸாநாயக்க

wpengine

தேர்தல் திட்டமிட்ட திகதியில் நடைபெறும், மாற்றமில்லை.

Maash

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள்! 20 பயனாளர்கள் இன்று தமிழ்நாட்டிற்கு.

Maash