பிரதான செய்திகள்

ஜனாதிபதி தேர்தலை அறிவித்த பின், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் நடத்தப்படும் வாக்கெடுப்புக்கு பின், கட்சியின் யாப்புக்கு அமையவே ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாக இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

ராஜபக்ச குடும்பத்திற்கு வெளியில் எவரும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கிடைக்காது.

தேர்தல் ஆணையாளர், ஜனாதிபதி தேர்தலை அறிவித்த பின், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.

அதுவே ஐக்கிய தேசியக் கட்சியின் சம்பிரதாயம் எனவும் தயா கமகே குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மஹி­யங்­க­னை அளுத்­கமை கல­வரம் முஸ்லிம் கவுன்ஸில் பொறுப்பு கூற­வேண்டும் -பொது­பல­ சேனா

wpengine

சமுர்த்தி உத்தியோகத்தருக்கு நடந்த அணியாயம்

wpengine

அரசாங்கத்தை வீழ்த்த இராணுத்தில் உள்ள சிலர் சதி -விக்ரமபாகு கருணாரத்ன

wpengine