பிரதான செய்திகள்

ஜனாதிபதி தற்போது பொம்மை, அதனை ஆட்டுவிற்கும் பொம்மலாட்டகாரன் பசில்

பசில் ராஜபக்சவுக்கோ அரசாங்கத்திற்கோ தொடர்ந்தும் நாட்டை நிர்வாகம் செய்ய முடியாது எனவும் மக்கள் தற்போது புதிய சக்தியை உருவாக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். வாக்களித்த 69 லட்சம் ம்ககளுக்கு மாத்திரமல்ல, சர்வதேசத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் அரசாங்கம் மீறியுள்ளது.

அரசாங்கம் ஒரு வாக்குறுதியை நிறைவேற்றி இருந்தால் அதனை வெளியிட முடியும். ஜனாதிபதி தற்போது பொம்மை, அதனை ஆட்டுவிற்கும் பொம்மலாட்டகாரன் பசில் ராஜபக்ச.

மகிந்த ராஜபக்ச தற்போது புடலங்காய் நிலைமைக்கு சென்றுள்ளார். 20வது திருத்தச் சட்டத்தை ஆதரித்தமை குறித்து கவலையில் இருக்கின்றேன். ஜனாதிபதி மீது வைத்த நம்பிக்கையின் பாவத்தை தற்போது அனுபவித்து வருகின்றோம் எனவும் விஜேதாச ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார். 

Related posts

நாட்டில் கடும் வெப்பநிலை வடக்கு, கிழக்கு, மலை­யகம் ஆகிய பிர­தே­சங்­களில் நில­வி­வரும் வரட்­சி

wpengine

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 331 மாணவர்கள் இடைநிறுத்தம்

wpengine

கிழக்கு மகாண கல்விப் பணிப்பாளரிடம் தோற்றுப்போன ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்

wpengine