பிரதான செய்திகள்

ஜனாதிபதி சட்டதரணியாக கிண்ணியாவை சேர்ந்த சத்தார் நியமனம்

திருகோணமலை – கிண்ணியாவைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி A.W.சத்தார் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கிண்ணியா மாலிந்துறை பிரதேசத்தில் 25.04.1957 இல் பிறந்துள்ளார்.

ஆரம்ப கல்வியை கந்தளாய் பரமேஸ்வரா கிண்ணியா ஆண்கள் பாடசாலை மற்றும் கிண்ணியா மத்திய கல்லூரியிலும், உயர் கல்வியை கொழும்பு சாஹிரா கல்லூரியிலும் கற்றார். 1976 – 1979 காலப்பகுதியில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்று சட்டமானியானார். பின்னர் சட்டக்கல்லூரியிலும் கற்று தேர்ந்தார்.

இவர் கிண்ணியாவின் முதல் சட்டமானியும் ஆவார்.
16.03.1981 தொடக்கம் சட்டத்தரணியாக இவர் கடமையாற்றி வருகின்றார். இவர் சில காலம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் கடமையாற்றியுள்ளார்.

கிழக்கில் அஷ்ரப், நிசாம் காரியப்பரை தொடர்ந்து 03 வது ஜனாதிபதி சட்டத்தரணியாவார்.
சாதாரண வறிய குடும்பத்தில் பிறந்து இந்நிலைக்கு வந்ததையிட்டு கிண்ணியா பிரதேச மக்கள் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Related posts

களுவாஞ்சிக்குடியில் சதொச நிலையத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் றிசாட்

wpengine

மிகப்பெரிய சவாலுக்கு முகம்கொடுத்துள்ள நவமணிப் பத்திரிக்கை

wpengine

“வடபுலமே எங்கள் தாயகம்” மீளக்குடியேறும் உரிமையை எவரும் தடுக்க முடியாது! அமைச்சர் றிசாத்

wpengine