பிரதான செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் அமைச்சரவை

அமைச்சரவை கூட்டம் இன்று (12) மாலை 5 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை ரயில் பயணிகளுக்கு நட்பு ரீதியான பயண சீட்டுக்களை அறிமுகப்படுத்தல் மற்றும் ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ளல் போன்ற சேவைகளை ஒன் லைன் மூலம் பெற்றுக்கொடுப்பது தொடர்பான யோசனையை அமைச்சரவையில் முன்வைத்துள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

ரயில் பயணங்களுக்கான ஆசனங்களை முன்கூட்டியே முன்பதிவு செய்வதில் சிலர் சட்டவிரோத நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டே குறித்த அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கல்முனை மாநகரத்தை துண்டாடும் தீர்மானம் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.

wpengine

15 ஆயிரம் உணவுப் பொதிகளை வழங்கிய எஸ்.எம் மரிக்காா்

wpengine

எதிர்நீச்சல் போட்டே மக்கள் பணியாற்ற வேண்டியிருக்கின்றது- அமைச்சர் றிசாத்

wpengine