செய்திகள்பிரதான செய்திகள்

ஜனாதிபதி உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரியை வெளிப்படுத்தாவிடின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கும் துரோகமாகும் .

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை ஜனாதிபதி  உரிய ஆதாரங்களுடன் வெளிப்படுத்தாவிடின் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும்” என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை ஏமாற்றுவதற்காக ஜனாதிபதி வழங்கிய போலி வாக்குறுதியாகவே இது கருதப்படும் எனவும்  சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பிரதான சூத்திரதாரியை ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னதாக வெளிப்படுத்துவதாக   கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் வைத்து ஜனாதிபதி வாக்குறுதியளித்திருந்தார் எனவும், தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை ஜனாதிபதி  வெளிப்படுத்தாவிடின்  வீதிகளில்   போராட்டம் முன்னெடுக்கப்படும் என  கொழும்பு பேராயர் தெரிவித்திருந்தார் எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அரசாங்கத்தினை ஆட்சியில் அமர்த்துவதற்கு  கொழும்பு பேராயர்  குழுவினர் பாரிய  ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர் எனவும்  எனவே தற்போது  உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை அறிந்து கொள்ள அனைவரும் ஆவலாக உள்ளனர் எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன்  ஜனாதிபதி  வாக்குறுதியளித்தவாறு உரிய ஆதாரங்களுடன் உண்மையான சூத்திரதாரி அடையாளப்படுத்தப்படுவாரா இல்லையா என்பது தெரியவில்லை எனவும், சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி வாக்குறுதியை நிறைவேற்றாவிடின் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும் எனவும், அத்துடன்  கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை ஏமாற்றுவதற்காக ஜனாதிபதி செய்த செயலாகவே கருதப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்த வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர்

wpengine

அரசாங்க அதிபரின் வழிகாட்டலில் மன்னார் மாவட்ட செயலகத்தில் இப்தார் நிகழ்வு

wpengine

முஸ்லிம் சமூகத்தின் நவீன சார்ளி சப்ளினாக மாறியுள்ள மு கா தலைவர்.

wpengine