செய்திகள்பிரதான செய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க – சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் சந்திப்பு…

இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், எமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவது அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

எனவே, இந்த விடயத்தில் விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சுற்றுலா அமைச்சின் அதிகாரிகளுடன் இன்று (17) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் சுற்றுலா அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அதன் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

சுற்றுலாத் துறையில் புதிய முன்னெடுப்பாக இந்த ஆண்டு 03 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வர எதிர்பார்க்கப்படுவதோடு அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்த ஏற்பாடுகளைப் பயன்படுத்துவது குறித்தும் இதன்போது பரவலாக ஆராயப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சுற்றுலா பிரதி அமைச்சர் கலாநிதி ருவன் ரணசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா மற்றும் சுற்றுலா அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

இந்தியாவில் ஏன் மயில் தேசிய பறவை? உட­லு­றவு கொள்­வ­தில்லை உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி மகேஷ் சந்­திர ஷர்மா

wpengine

வடமாகாணத்தில் 44 மாதிரிக் கிராமங்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச

wpengine

ஸாஹிராவின் 79ஆவது பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த “கார் வோஷ்’

wpengine