பிரதான செய்திகள்

ஜனாதிபதியை சந்தித்த மன்னார் கட்டுக்கரை திட்டக் குழுவினர்!

மன்னார் மாவட்ட கட்டுகரை திட்ட குழுவினர் நேற்றைய தினம் ஜனாதிபதியை சந்தித்திருந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட இடர்கள் தொடர்பாக திட்டக் குழுவினர் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தனர் குறிப்பாக கீழ் மல்வத்தோயா மற்றும் கட்டுக்கரை குள புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டிருப்பது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் பிரகாரம் உடனடியாக அவ் வேலைத்திட்ங்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கான உர கொடுப்பனவு தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் இவர்கள் முன்வைத்தபோது தொடர்ச்சியாக உரத்திற்கான கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார்.

குறித்த ஜனாதிபதியுடனான சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலனாதன் மற்றும் மன்னார் மாவட்ட கட்டு கரை திட்டக் குழுவினர் கலந்து கொண்டணர்!

Related posts

வில்பத்து காடழிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நம்பிக்கை கொண்டுள்ளோம்

wpengine

இனப்பிரச்சனை தீர்வு! மஹிந்த ராஜபக்ஷ குழப்பும் நடவடிக்கையில் – இரா. சம்பந்தன்

wpengine

சிவகரன் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை; வெளிநாடு செல்லவும் தடை

wpengine