Breaking
Fri. Nov 22nd, 2024

(ஆர்.ராம்) 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வில்பத்து பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்து உண்மை நிலைமைகளை அறிந்து கொள்ள வேண்டும். அதனை விடுத்து மாறுபட்ட கருத்துக்களை அடிப்படையாக வைத்து தீர்மானங்களை ஒருபோதும் எடுக்க கூடாது என அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் பிரதிநிதிள் கூட்டாக வலியுறுத்தினார்கள்.

தமது பூர்வீகப் பிரதேசங்களில் குடியேற முயற்சிக்கும் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதச் சூழலியலாளர்களும் இனவாதிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கூட்டாக எதிர்ப்பை வெளியிட்டதோடு பிச்சைக்காரன் புண்போல இப்பிரச்சினை நீடித்துச் செல்ல அனுமதிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டினர்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை அரசியல் பேதமின்றி அனைத்து முஸ்லிம் பிரநிதிகளும் விரைவில் நேரடியாக சந்திக்கவுள்ளதாக திட்டவட்டமாக அறிவித்தவர்கள் அப்பாவி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது விட்டால் நீதிமன்தினை நாடவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் என்.எம் அமீன் தலைமையில் “வில்பத்து பிரச்சினை தொடர்பாக எமது நிலைப்பாடு” என்ற தலைப்பில் கொழும்பு ரேணுகா ஹோட்டலில்   ஊடகவியலாளர் மாநாடொன்று இன்று வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தது.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ரிஷாட் பதியூர்தீன், பிரதியமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர்ரஹ்மான், இஷாக் ரஹ்மான், எம்.எச்.எம்.நவவி, மாகாண சபை உறுப்பினர்களான அர்ஷாட் நிஸாம்டீன், ஜனுபர், தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவர் அஷாத் சாலி, ஜம் இய்யதுல் உலமா சபையின் பிரதிச் செயலாளர் தாசிம் மௌலவி மற்றும் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த சட்டத்தரணி ஷஹீட் ஆகியோர் உட்பட சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *