பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஜனாதிபதியின் வவுனியா வருகையை முன்னிட்டு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!

ஜனாதிபதியின் வவுனியா வருகையை முன்னிட்டு கலாபோகஸ்வேவ பகுதியில் பல்வேறு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வடக்கு மாகாணத்திற்கான முதல் விஜயமாக வவுனியா சிங்கள குடியேற்றக் கிராமமான கலாபோகஸ்வேவ பகுதிக்கு நாளை விஜயம் செய்யவுள்ளார்.

கிராமத்துடன் உரையாடல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் கலாபோகஸ்வேவ பகுதிக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களின் குறைநிறைகள் தொடர்பாகக் கேட்டறியவுள்ளதுடன், பல்வேறு கிராமிய அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தவுள்ளார்.

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கலாபோகஸ்வேவ பாடசாலை முழுமையாக சிரமதானம் செய்யப்பட்டு பிரம்மாண்டமான கொட்டகை அமைக்கப்பட்டு அப்பகுதி வீதிகளும் அவசர அவசரமாகச் செப்பனிடப்பட்டு வருகிறது.

மாவட்ட அரச அதிபர், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், வவுனியா வடக்கு மற்றும் வவுனியா தெற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மின்சார சபையினர்,சுகாதார பரிசோதகர்கள் ஆகியோரும் விடுமுறையையும் பொருட்படுத்தாது நிகழ்வுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். அத்துடன் குறித்த பகுதியின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

கோட்டாபய ராஜபக்ச கைது, கம்மன்பில யூகம், உயிர்த்த ஞாயிறு தொடர்பிலும் அவர் முன்னரே அறிந்திருக்கின்றார்.

Maash

Colombo D.S. Senayake College celeberated Internationl Mother Language Day – chief guest state minster education Ratha krishnan

wpengine

பிரான்சில் இருந்து இந்தியா சென்று கடல் மூலம் இலங்கை செல்ல முயன்ற இரு புலம்பெயர் தமிழர் கைது .

Maash