ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியதும் பதவி விலகுவதற்கு அமைச்சர் ஒருவர் ஆயத்தமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரவையின் முக்கிய அமைச்சர் ஒருவரே இவ்வாறு பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி ஸ்கொட்லாந்து விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் குறித்த அமைச்சர் பதவி விலகல் கடிதத்தை ஒப்படைக்க உள்ளார்.
பதவி விலகல் கடிதத்தையும் குறித்த அமைச்சர் ஆயத்தம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரின் இந்த பதவி விலகல் ஆளும் கட்சிக்குள் பாரிய பிளவுகளை ஏற்படுத்தும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
யாரும் எதிர்பார்க்காத அமைச்சர் ஒருவரே இவ்வாறு பதவி விலக உள்ளதாக தெற்கு ஊடகம் தெரிவித்துள்ளது.