பிரதான செய்திகள்

ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான கூட்டங்களுக்கு செல்லப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தாம் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இனி வரும் காலங்களில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் எந்தவொரு கூட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை எனவும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகித்துக் கொண்டு எதிர்க்கட்சியில் அமரப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவிலிருந்து என்னை நீக்கியதன் பின்னர் ஜனாதிபதியுடனான எந்தவொரு கூட்டத்திலும் நான் பங்கேற்றது கிடையாது என குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

Related posts

வன்னி தேர்தல் தொகுதியின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ்சின் தந்தை மரணம்

wpengine

முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை விவகாரம் விஸ்பரூபம் எடுத்து முகத்திரைக்கான தடை விதிக்கப்பட்டது.

wpengine

கண்டி பாடசாலை குறைகளை கேட்டறிந்த அமைச்சர் ஹக்கீம்

wpengine