பிரதான செய்திகள்

ஜனாதிபதியின் இப்தாரை புறக்கணிப்பது ஆரோக்கியம் அல்ல

(வை எல் எஸ் ஹமீட்)

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனையவர்கள் ஜனாதிபதியின் இப்தார் நிகழ்வைப் புறக்கணிக்க வேண்டுமென்ற ஒரு கருத்து சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப் படுகின்றது. இது ஒரு ஆரோக்கியமான கருத்து அல்ல. பகிஷ்கரிப்பதற்கு எவ்வளவோ இருக்கும்போது ‘இப்தாரைப்’ பகிஷ்கரிக்கச் சொல்கின்ற அளவுக்கு எமது சமூகத்தின் நிலை இறங்கியிருப்பது கவலைக்குரியது.

எமது ‘முட்டில்’ தங்கியிருக்கின்ற ஒரு ஆட்சியில் எமக்கு அடி விழுகின்றபோது, இந்த அரசை செயற்பட வைக்கத்தெரியாத, அந்த ‘முட்டைப்’ பாவிக்கத் தெரியாத அல்லது விரும்பாத மக்கள் பிரதிநிதித்துவங்களும் அவர்களைச் செயல்படவைக்கத் தெரியாத சமூகமும் இப்தாரைப் புறக்கணிக்கச் சொல்லுகின்ற நிலை, நமது சமூகம் திருந்துவதற்கு இன்னும் நாட்கிடக்கின்றது; என்பதையே காட்டுகின்றது. கைக்குள் வெண்ணெய்யெ வைத்துக் கொண்டு நெய் தேடி அலைகின்ற சமூகம்.

தவிர்க்க வேண்டியவற்றை விடுத்து, தவிர்க்கத் தேவையில்லாததை தவிர்த்து பின் விளைவுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம்.

 

Related posts

பேஸ்புக் காதல் முறிவு! அதிரடிபடை வீரர் தற்கொலை

wpengine

எதிர்வரும் திங்கள் கிழமை அரச விடுமுறை

wpengine

எல்லப்பர் மருதங்குளம் முதியோர் இல்லத்திற்கு விசேட மதிய உணவு வழங்கல்

wpengine