பிரதான செய்திகள்

ஜனாதிபதியினால் சமுர்த்தி பயனாளிகளுக்கு சந்தோஷமான செய்தி

சமுர்த்தி கொடுப்பனவுகளை நிறுத்துவதோ குறைப்பதோ ஒருபோதும் இடம்பெறாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

எம்பிலிப்பிட்டிய கம்உதாவ மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

ஜனாதிபதி குறிப்பிட்டதாவது,

இந்த நாட்டின் சுமார் 15 இலட்சம் மக்கள் சமுர்த்தி ஊடாக பயனடைகின்றனர். சமுர்த்தி கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்து நாட்டில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமையை நான் அவதானித்தேன். எனினும், சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை நிறுத்தவோ, குறைக்கவோ போவதில்லை என்பதை நான் தௌிவாகக் கூற விரும்புகின்றேன். அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி, தொடர்ந்தும் ஒதுக்கப்படும். தற்போது சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கப்படாத ஒரு இலட்சம் குடும்பங்கள் உள்ளன. அவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு புதிதாகக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

Related posts

ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் சட்டமூலம் எதுவும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை : அரசாங்கம்.

Maash

மன்னார் பிரதேச செயலகத்தில் சிப்தொர நிகழ்வு

wpengine

அமெரிக்காவையும் ,அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன்- ஹம்ஸா பின்லேடன்

wpengine