ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி நிச்சயமாக பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பதுளையில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி பதவியையோ, பிரதமர் பதவியையோ நூல் சூத்திர சூழ்ச்சிகளில் பெற்றுக்கொள்ளும் எந்த தேவையும் எனக்கில்லை.
இந்த பதவிகள் ஆபரணங்கள் அல்ல. மக்கள் சேவைக்காக உருவாக்கப்பட்ட பதவிகள். அந்த பதவிகளுக்கு என்றாவது ஒரு நாள் செல்ல வேண்டியேற்பட்டால், பொதுமக்கள் ஊடாகவே செல்வேன்.
ரணில் விக்ரமசிங்கவின் பிரதமர் பதவியை எனக்கு வழங்குவதாக 72 முறை யோசனை முன்வைக்கப்பட்டது.
2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 முறையும் மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் 52 நாள் அரசாங்கத்தின் காலத்தின் போது 61 முறையும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனையை நிராகரித்த நானே, ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு தலைவராக வந்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.