Breaking
Thu. Apr 25th, 2024

(ஊடகப்பிரிவு)

வடக்கு, கிழக்கில் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கி அவர்களின் குடும்ப வறுமையை போக்குவதோடு, நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்கு அவர்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அமைச்சர் எழுதியுள்ள கடிதங்களில் கூறப்பட்டுள்ளதாவது,

நாட்டிலே படித்த இளைஞர் யுவதிகளும், பட்டதாரிகளும் தொழிலின்றி பெரிதும் அவதியுறுகின்றனர். வறுமைகோட்டின் கீழ் வாழும் அவர்களினது குடும்பங்கள், நாளுக்கு நாள் ஜீவமரணப் போராட்டத்தை நடாத்தி வருகின்றனர். இதனால், நாட்டின் பொருளாதரம் நலிவடைந்து வருவதுடன் மக்களின் இயல்பு வாழ்வும் சீரழிகின்றது.

நல்லாட்சி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பின்னர், வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதாகக் கூறிய வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வந்த போதும், மேலும் ஏராளமானோர் தொழிலின்றி அவதியுறுகின்றனர். அரசாங்கத்தின் பத்து இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு கைத்தொழில், வர்த்தக அமைச்சர் என்ற வகையில், எம்மால் முடிந்தளவு உதவிகளைச் செய்து வருகின்றோம். இன்னும், இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற எங்களது அவதானத்தை செலுத்தி வருகின்றோம்.

வடக்கு, கிழக்கில் யுத்தகால சூழ்நிலையில் படித்து, நீண்டகாலம் தொழிலின்றி அவதியுற்ற பட்டதாரிகளுக்கு அண்மையில் வழங்கப்பட்ட நியமனங்களுக்காக, அந்தப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினரான நான் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.

எனினும், இன்னும் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் தமக்கான தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியாமல் திண்டாடுகின்றனர். இவர்களுக்கு மனிதாபிமான ரீதியில் உதவுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *