பிரதான செய்திகள்

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஜேர்மன் கிளையினரின் வாழ்வாதார உதவி

யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு புலம்பெயர்ந்த தாயக உறவுகளினால் உதவி வழங்கும் செயற்திட்டத்தின்கீழ் நேற்று (22.11.2016) செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்டத்தின் மன்னார் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் மேற்குப் பகுதியைச் சேர்ந்த புளொட் அமைப்பின் நீண்டகால உறுப்பினரான தொம்மை விக்டர் (ஓட்டி விக்டர்) என்வருக்கு 22,350/- ரூபா பெறுமதியான நண்டு பிடிக்கும் தொழிலுக்கான தங்கூசி, வலை, கயிறு மற்றும் ஈயம் என்பவனவற்றை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் ஜேர்மன் கிளையினர் வாழ்வாதார உதவியாக வழங்கியுள்ளனர்.

மறைந்த ஜேர்மன் கிளை உறுப்பினர் கார்த்திகேசு சிவகுமாரன் (தோழர் சுப்பர்)அவர்களின் முதலாம் வருட நினைவையொட்டி இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது வரையிலும் கூலித் தொழிலாளியாக செயற்பட்டுவரும் தொம்மை விக்டருடைய குடும்பத்தின் வாழ்வாதார நிலையை மேம்படுத்தும் நோக்கிலேயே இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி உதவி வழங்கும் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) செயற்குழு உறுப்பினர் (மன்னார் மாவட்டம்) திரு. இரா.அந்தோனிப்பிள்ளை (கொன்சால்) பங்குகொண்டிருந்தார்.unnamed-1

Related posts

பதவிப்பிரமாணம் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய உரை.

wpengine

சமுர்த்தி பயணாளிகளுக்கு வெளியாகிய மகிழ்ச்சியான செய்தி!

Editor

மன்னாரில் வெள்ளைப்பிரம்பு தினம்

wpengine