பிரதான செய்திகள்

சோள இறக்குமதிக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வியாபார பண்ட வரி நீக்கம்!

திரிபோஷா உற்பத்திக்கு அவசியமான சோளத்தை இறக்குமதி செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வியாபார பண்ட வரி நீக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வந்துள்ளதாக நிதி பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

திரிபோஷா உற்பத்திக்காக மாதமொன்றுக்கு அவசியமான சோளத்தை உள்நாட்டில் பெற்றுக்கொள்ள முடியாமையால் இந்தியாவிலிருந்து சோளத்தை இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திரிபோஷா நிறுவனத் தலைவர் தீப்தி குலரத்ன அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதேநேரம், திரிபோஷா உற்பத்திக்கு தேவையான சோளத்தை பயிரிடும் முறைமை பெரும்போகத்தில் இருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேஸ்புக் காதல்! 55 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகள் கொள்ளை

wpengine

ஞானசார தேரரின் நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சியடைய முடியாது.

wpengine

“பர்தாவை கழற்றிவிட்டு உள்ளே வரவும்”

wpengine