Breaking
Sun. Nov 24th, 2024

இன்றைய தினம் (30.06.2017) மன்/பற்றிமா மத்திய மகா வித்தியாலயத்தில் கடந்த வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரிட்ச்சையில் அதிகூடிய சித்திகளைபெற்ற 10 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வானது பாடசாலை அதிபர் அருட்சகோதரர் ஜே.ஸ்டானிஸ்லாஸ் தலைமையில் காலை 8 மணிக்கு ஆரம்பமானது,

குறித்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் அவர்கள், எமது மாகாணத்தில் அனைத்து மாணவர்களும் சகல வசதிகளோடும் பிறக்கவில்லை மிகவும் வறிய மாணவர்களே அதிகமாக காணப்படுகின்றார்கள் என்றும் பல்வேறு சோதனைகளுக்கும் வேதனைகளுக்கும் மத்தியிலேயே தமது கல்வியினை பயின்று வருவதாகவும், அத்தகைய சோதனைகளையும் வேதனைகளையும் சாதனைகளாக மாற்றுகின்ற மாணவர்களாக நாம் மாறவேண்டுமென்று தெரிவித்திருப்பதாக அமைச்சர் அவர்களின் ஊடகப்பிரிவினால் ஊடகங்களுக்க்கு அனுபிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.

மேற்படி கௌரவிப்பு நிகழ்வில் கௌரவ விருந்தினராக அருட்சகோதரி பவளராணி கலந்துகொண்டதோடு குறித்த 10 சாதனை மாணவர்களையும் பாடசாலைச் சமூகம் ஒன்று சேர்ந்து பேசாலை நகரப்பகுதியில் இருந்து ஊர்வலமாக பாடசாலைவரை அழைத்துச்சென்று பரிசில்கள் வழங்கி கௌரவித்ததோடு அத்தகைய மாணவர்களை ஈன்றெடுத்த பெற்றோர்களும் கெள்ரவிக்கப்பட்டனர்.

குறித்த கௌரவிப்பு நிகழ்வில் பிரதமவிருந்தினர் உரையாற்றும்போது அமைச்சர் அவர்கள் பின்வரும் முக்கிய சில விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார், குறிப்பாக தனக்கு கல்வி பயிற்றுவித்த அருட்சகோதரர் ஸ்டானிஸ்லாஸ் அவர்களே இப்பாடசாலையின் தற்போதைய அதிபராக கடமையாற்றி வருவதாகவும், அவர் செல்கின்ற பாடசாலைகளில் மிகுந்த அர்ப்பணிப்போடு சேவையாற்றி அதனை முன்னிலைக்கு கொண்டுவருகின்ற ஒருநபர் என்றும் அதற்க்கு ஒரு எடுத்துக்காட்டாக சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு அமைந்திருக்கின்றதென்றும், இன்னும் ஒருசில வருடங்களில் ஏனைய பெரிய பாடசாலைகள் பயப்பிடுகின்ற அளவிற்கு இப்பாடசாலையை உயர்வுக்கு கொண்டுவருவார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை எனக்கூறி தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தனது ஆசிரியருக்கு விசேடவிதமாக அமைச்சர் அவர்கள் தெரிவித்திருந்தார்.

மேலும் வாழ்க்கை வட்டத்தில் சோதனைகளும் வேதனைகளும் சந்தோசங்களும் மாறிமாறி வருவது தவிர்க்கமுடியாத ஒன்றெனவும், இவை வாழ்க்கையிலிருந்து பிரிக்கமுடியாத அம்சங்களாக இருக்கின்றதெனவும், சோதனைகளும் வேதனைகளும் இல்லாத வாழ்க்கை எவருக்கும் இல்லையெனவும் அவ்வாறு சோதனைகள் வருகின்றபோது மாணவர்கள் துவண்டுவிடாது மன உறுதியோடு செயற்பட்டு அச்சொதனைகளை படிக்கட்டுக்களாக மாற்றி அதனூடாக சிகரத்தை அடைந்து சாதனை படைக்கின்ற மாணவர்களாக நீங்கள் அனைவரும் மாறவேண்டுமென மாணவர்களை கேட்டுக்கொண்டார்.

மேலும் ஒருவிடயத்தினை மேற்கொள்ளும் முன்னர் அது படிப்பாக இருந்தாலும், வேலையாக இருந்தாலும், பரிட்சைக்கு ஆயத்தப்படுத்துவதாக இருந்தாலும் அல்லது எத்தகைய செயர்ப்படுகளாக இருந்தாலும் அது சரிதானா என்பதனை ஒருதடவைக்கு இருதடவை ஜோசித்ததன் பின்னர் அதனை மேற்க்கொள்ள வேண்டுமென்றும் அவ்வாறு செயற்ப்படும்போது நிச்சயமாக சரியான விடயங்களை சரியாக இனங்கண்டு அதனூடாக நாம் வெற்றியடைய முடியும் என்பதோடு மட்டுமல்லாது நம்மை சூழவுள்ளவர்களுக்கும் அது நன்மையாக அமையும் என்பதனை சுட்டிக்காட்டியதோடு தீய செயல்களிலிருந்தும் நாம் விலகியிருக்கமுடியுமென்றும் தெரிவித்துள்ளார், அத்தோடு ஒருபடசலையின் அபிவிருத்தி, வளர்ச்சி என்பது வெறுமனே அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் கைகளில் மாத்திரம் இல்லையென்றும் பாடசாலை சமூகம் பக்கபலமாக இருந்தால் மட்டுமே பாடசாலையின் வளர்ச்சியோடு கூடிய சந்தோசத்தினையும் அனுபவிக்க முடியுமென்றும், அந்தவகையில் பாடசாலை அபிவிருத்திக்குழு, பெற்றோர் மற்றும் பழையமாணவர்கள் அதிபர், ஆசிரியர்களுக்கு உந்துசக்தியாக செயற்படவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இறுதியாக இவ்வருடம் சாதனை படைத்த மாணவர்களை கௌரவித்து வாழ்த்தியதோடு எதிர்வருகின்ற வருடங்களில் இதனைவிட பலமடங்கு மாணவர்கள் சாதனையாளர்களாக வருவார்கள் என்ற நம்பிக்கையோடு கூடிய வாழ்த்துக்களை கூறியதோடு அதற்காக இறைவனை பிராத்திப்பதாகவும் தெரிவித்து விடைபெற்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *