பிரதான செய்திகள்

சொந்த நிதியில் தெருவிளக்குகளை பெற்றுக்கொடுத்த கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்

(ஊடகப்பிரிவு)
கொத்தாந்தீவு (ரஹ்மத்கம) பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஊரின் முக்கியஸ்த்தகர்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் விருதோடை வட்டார அமைப்பாளரும், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினருமான ஆஷிக் அவர்களுடனான சந்திப்பு ஆஷிக் அவர்களின் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்தச்சந்திப்பின் போது கொத்தாந்தீவு (ரஹ்மத்கம) பள்ளி நிர்வகிகள் மற்றும் ஊரின் முக்கியஸ்த்தர்களினால்  “தங்கள் ஊரின் பல இடங்களில் தெருவிளக்குப்பற்றாக்குறை நிகழ்கின்றது, இதனால் தொழுகைக்காக வரும் பெண்கள்,சிறுவர்கள் அச்சத்துடனே பயணிக்கும் நிலைக்காணப்படுகின்றது”  எனவே இப்பிரச்சினை தீர்க்கும் வகையில் தெருவிளக்குகளைப்பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்ட மனு ஒன்று ஒப்படைக்கப்பட்டது.

இதன்போது ஆஷிக் அவர்கள் நாளைய தினமே தெருவிளக்குகளை சொந்த நிதியில் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்தார்.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த பயணம் செய்த வாகனம் விபத்து

wpengine

போதைப்பொருள் கடத்தல்! உரியவர்களின் சொத்து முடக்கப்படும்.

wpengine

அர்ஜூன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்துவருவதே எங்கள் குறிக்கோள் – நலிந்த ஜயதிஸ்ஸ

Maash