அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

சைக்கிள் வசமானது பருத்தித்துறை நகரசபை..!

பருத்தித்துறை நகரசபையின் புதிய தவிசாளராக வின்சன் டிபோல் டக்ளஸ் போல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தவிசாளரை தெரிவு செய்வதற்கு பகிரங்க வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் வின்சன் டீபோல் டக்ளஸ் போல் 7/4 என்ற வாக்குகளில் வெற்றிபெற்றார்.

இலங்கை தமிழரசு கட்சி சார்பில் தி.சந்திரசேகர் அவர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் வின்சன் டிபோல் டக்ளஸ்போல் ஆகிய இருவரின் பெயர்கள் தவிசாளர் பதவிக்கு முன்மொழியப்பட்டிருந்தது.

இதனையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வின்சன் டீபோல் டக்ளஸ் போல் வெற்றிபெற்று தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. இதில் 7/3 என்ற அடிப்படையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் தேவசிகாமணி தேவராசேந்திரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதில் பருத்தித்துறை நகரசபை செயலாளர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சி யாழ்மாவட்ட தலைவர் ஆ.சுரேஸ்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த டொன் பிரியசாத்..!

Maash

உப்பு கூட்டுதாபன அபிவிருத்திகளை ஆரம்பித்த அமைச்சர் றிஷாட் (படம்)

wpengine

அத்தியாவசிய சேவைகளாக தொடரும் அரச சேவைகள்!

Editor