பிரதான செய்திகள்

சேவையிலிருந்து விலகிச் செல்லும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்!

பணி அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாதாந்தம் 40-50 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து வெளியேறுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 
பொலிஸ் அதிகாரிகளின் சம்பளம் குறைப்பு, சேவைக் காலம் எட்டு மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்படாதது, ஐந்தாண்டு விடுமுறை எடுத்து வெளிநாடு செல்வது, வங்கிக் கடன் பெறுவது போன்ற காரணங்களை முன் வைத்து அதிகமானோர் பொலிஸ் துறையை விட்டு வெளியேறுவதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சேவையை விட்டு வெளியேறிய பெரும்பாலான அதிகாரிகள் ஐந்து வருடங்களுக்கும் குறைவான சேவையை கொண்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

Related posts

வடக்கு போக்குவரத்து அமைச்சருக்கும், தனியார் போக்குவரத்துச் சங்க உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு.

wpengine

ஞாயிறு தாக்குதல்! உண்மையை வெளிக்கொண்டு வரும் போராட்டத்தில் நாங்கள் கொல்லப்பட்டாலும் போராடுவோம்

wpengine

மதங்களை மலினப்படுத்தும் நிலையில் உண்மையான சுதந்திரம் எமக்கேது? – அசாத் சாலி

wpengine