பிரதான செய்திகள்

சேதங்கள் தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சின் பரிந்துரைக்கு அமைய இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எஸ்.எஸ் மியன்வல தெரிவித்துள்ளார்.

மாவட்ட அரசாங்க அதிபர்களின் அறிக்கைக்கு அமைய நிவாரண உதவிகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

பதுளை, இரத்தினப்புரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலிருந்து கிடைத்துள்ள அறிக்கைக்கு அமைய நிவாரணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட அரசாங்க அதிபர்களின் அறிக்கையின் பிரகாரம் திறைசேரியிலிருந்து நிதியை பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் இடர்முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

காப்புறுதி மற்றும் நிலையான நிவாரண உதவி ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சீரற்ற வானிலையால் எவரேனும் உயிரிழந்திருப்பின் அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா நஷ்ட்டஈடு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

5000ரூபா! 10000அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்க நடவடிக்கை

wpengine

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை ஏன் மைத்திரி எடுத்தார்

wpengine

மார்ச் 12 இயக்கத்தின் அம்பாறை மாவட்டத்திற்கான கூட்டம்.

wpengine