பிரதான செய்திகள்

செவ்வாய்க்கிழமை விஷேட அமைச்சரவை கூட்டம்

பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

“பிரமுகர்கள் கொலை சூழ்ச்சி“, ஜனாதிபதியின் ஐ.நா. உரை, மாகாண சபைத் தேர்தல் இழுத்தடிப்பு உள்ளிட்ட விவகாரங்களால் தெற்கு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இவை தொடர்பிலும், முக்கிய சில அமைச்சரவைப் பத்திரங்கள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.

ஐ.நா. பொதுச் சபையின் 73வது கூட்டத் தொடரில் பங்கேற்கச் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாடு திரும்பினார்.

தோஹாவில் இருந்து புறப்பட்ட கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான கிவ் ஆர் 668 என்ற விமானத்தின் மூலம் அவர் இலங்கையை வந்தடைந்தார்.

Related posts

சவூதி மொஹமட் பின் சவூத் பல்கலைக்கழகத்துக்கும் பெடிகளோ கெம்பஸுக்கும் இடையில் கலந்துரையாடல்

wpengine

மின்சாரக் கட்டணப் பட்டியலுக்குப் பதிலாக Smart Meter

wpengine

100 வயதினை தாண்டியோருக்கு 5000ரூபா

wpengine