மட்டு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள செம்மண்ணோடை கிராம அபிவிருத்தி சங்கத்தின் அழைப்பின் பேரில் கடந்த 2016.09.18ஆந்திகதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அக்கிராமத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தபோது செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலயத்திற்கு இடப்பற்றாக்குறை காரணமாக அருகிலுள்ள காணி ஒன்றினை கொள்வனவு செய்வதற்காக பலரிடம் நிதிவி கோரிவருவதாகவும், அதற்கு தங்களான நிதியினை வழங்குமாறு கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் ஏ.எல்.ஏ. கபூர் அவர்களினால் கேட்டுக்கொண்டதற்கினங்க தனது தந்தையின் ஞாபகார்த்தமாக 25000 (இருபத்தையாயிரம்) ரூபா நிதியினை வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்தார்.
தான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின், கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலயத்தின் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்து கொள்வதற்காக தனது சொந்த நிதியிலிருந்து 25000 ரூபாவினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் எம். ஷிப்லி பாறுக் பாடசாலையின் அதிபர் எம்.எஸ். சுபைதீன் அவர்களிடம் 2016.10.26ஆந்திகதி (புதன்கிழமை) இன்று வழங்கி வைத்தார். இன, மத பேதமின்றி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தன்னாலான பலதரப்பட்ட உதவிகளை வழங்கி வரும் ஒரு நபராக பொறியியலாளர் எம். ஷிப்லி பாறுக் சிறந்து விளங்குகின்றார்.