செய்திகள்பிரதான செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் இராணுவத்தினரின் சடலங்கள்.! : தயாரத்ன தேரர்.

“யாழ். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை மீளத் தோண்டுவதன் மூலம் இவர்கள் எதிர்பார்ப்பது என்ன? விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள்கூட அங்கு இருக்கக்கூடும்.” – இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் தற்போது மீண்டும் பேசப்படுகின்றது. இந்த விகாரம் மீளத் தோண்டப்படுவதன் நோக்கம்தான் என்ன? இந்த நாட்டில் போர் நிலவியது. பயங்கரவாதம் இருந்தது. மக்கள் கொல்லப்பட்டனர். படையினர் கொல்லப்பட்டனர். அழிவுகள் ஏற்பட்டன. கடைசியில் படையினர்தான் போரை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை ஏற்படுத்தினர்.

செம்மணி மனிதப் புதைகுழியில் இருப்பவை யாருடைய சடலங்கள்? பூநகரி மற்றும் ஆனையிறவு மோதலின்போது படையினர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர். சில உடல்களே கிடைக்கப்பெற்றன.

எனவே, செம்மணியில் மீட்கப்படும் மனிதச் சிதிலங்கள் இராணுவத்தினருடையவை என எம்மால் கூறமுடியும்.

செம்மணிப் புதைகுழியை எதற்காக மீண்டும் தோண்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த விடயத்தைத் தோண்டத் தோண்ட அது யாசகனின் காயங்கள்போல் மாறிவிடும். எனவே, அரசும், தமிழ் அரசியல்வாதிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.” – என்றார்.

Related posts

20வது அரசியலமைப்புத் திருத்தம்! நீதி மன்ற தீர்ப்பு சபாநாயகரிடம்

wpengine

மந்தகதியில் நடைபெறும் மன்னார் நகர அபிவிருத்தி பணிகள்! கவனம் செலுத்துமா மாவட்ட செயலகம்

wpengine

பொதுபல சேனா,அமைச்சர் சம்பிக்க போன்றவர்கள் யார்? இப்றாஹிம் கேள்வி

wpengine