(ஊடகப்பிரிவு)
செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படவிருக்கும் பொலித்தீன் தடையானது இலங்கையில் சில்லறை பொருளாதாரம் ஏற்றுமதி மற்றும் கழிவகற்றல் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் சாத்தியக் கூறுகள் உள்ளன. இலங்கையின் உயர் அடர்த்தி (HDPE) பொலீத்தின் மற்றும் மீள்சுழற்சி கைத்தொழில் உள்ளவர்கள் இத்தடைக்கு எதிராக போர் முழக்கம் செய்துள்ளார்கள்.
இத் தடையினால் நாடு பூராகவும் உள்ள 345,000 பேர் தமது தொழில்களை இரவோடு இரவாக இழப்பர்.
அகில இலங்கை பொலிதீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீள் சுழற்சி சங்கத்தின் [ ACPMRA] தலைவர் அனுரா விஜயதுங்க கொழும்பில் ஆகஸ்ட் எட்டாம் திகதி வெளியிட்ட கருத்தின்படி இந்த பொலிதீன் தடையானது ஒரு மனிதாபிமானமற்ற நிலையை உருவாக்கி 345,000 பேரினது வாழ்வாதாரத்தை இரவோடு இரவாக அழித்து விடுகிறது என்றார் ACPMRA தலைவர் விஜதுங்க.
இவருடன் இணைந்து 300க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீனையும் அமைச்சின் உயர் நிலை உத்தியோகத்தர்களையும் ஆகஸ்ட் எட்டாம் திகதி கொழும்பு 3 இல் அமைந்துள்ள அமைச்சின் காரியாலயத்தில் சந்தித்து தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தினர்.
இக்கைத்தொழிலில் நிலை குலைந்து கலக்கம் அடைந்திருக்கும் பல தரத்திலும் இருக்கும் கைத்தொழில் இயக்குநர்கள் 300 பேர், [நாடு பூராகவும் உள்ள 800 உயர் அடர்த்தி பொலீத்தின் தொழிலை பிரதி நிதித்துவப் படுத்துவோர்] , ACPMRA தலைவர் விஜயதுங்கவின் தலைமையில் அமைச்சர் பதியுதீனை சந்தித்த போது, செப்டெம்பர் முதலாம் திகதி அமுல்படுத்தப்படவிருக்கும் தடைக்கான தீர்வை பெற்றுத்தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இலங்கையில் வருடாந்த பொலித்தீன் உற்பத்தியில் 80% மானவை அதி அடர்த்தியில் உள்ளது. மேலும் ஏனைய 20 % குறைந்த அடர்த்தியில் (LDPE) உள்ளது. LDPE ஐ விட HDPE ன் உயர் வலு காரணமாக அவை சுற்றாடலுக்கு தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது. வருடாந்தம் HDPE உற்பத்தியாளர்கள் 40 மில்லியன் HDPE பொலித்தீனை உற்பத்தி செய்கிறார்கள். இது செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து தடை செய்யப்படுகிறது. வருடாந்த HDPE பொலித்தீன் உற்பத்தியின் பெறுமதி 12.87 பில்லியன் [ அமெரிக்க டொலர் 84 பில்லியன்] அத்துடன் இத்துறை 345,000 ஊழியர்களை வேலையில் ஈடுபடுத்தியுள்ளது, அவர்களில் 45000 பேர் நேரடியாகவே தொழில் புரிபவர்கள். ACPMRA தலைவர் விஜயதுங்க, அமைச்சர் பதியுதீனிடம் இந்த தடை நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என கூறினார்.
பொலிதீன் மக்களின் நாளாந்த வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. நாங்களும் சுற்றாடலை பாதுகாப்பதற்கு உதவியாக இருக்க விரும்புகிறோம். 800 HDPE இயக்குநர்கள் தமது கைத்தொழில்களை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த தடை அறிவிக்கப்பட்டதன் பின்பு பணப்பரிமாற்றத்தில் நாம் மிகவும் மோசமான நிலையில் உள்ளோம். எவரும் பணம் தர முன்வருகிறார்கள் இல்லை. இதனால் இக்கைத்தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். முழுமையாகவே HDPE கைத்தொழில் ஒரு ஸ்தம்பித நிலையில் அடைந்துள்ளதாகவும் அத்துடன் இத்தடை பற்றி முன்அறிவித்தல் எதுவும் கொடுக்கப்படவில்லை எனவும் கூறினார்.
ACPMRA தலைவர் விஜயதுங்க. நாங்கள் கொள்கைமட்ட முடிவெடுக்கும் குழுவில் சேர்ந்துகொள்ள முயற்சித்து HDPE தயாரிப்பளர்களை சேர்த்துக்கொள்ளும் படி கேட்டு இருந்தோம். ஆனால் 16 உறுப்பினர்களை கொண்ட இக்குழு இக்கைத்தொழில் இருந்து ஒருவரை கூட உள்ளீடு செய்யவில்லை. நாங்கள் எவரும் அழைக்கப்படவும் இல்லை அதற்க்கு பதிலாக அவமானப்படுத்தப்பட்டோம்.
அரசாங்கத்தின் அண்மைய சிபாரிசுகளின்படி, செப்டெம்பர் முதாலம் திகதி அமுலுக்கு வரும் தடையின் பின்னர், எதிர்காலத்தில் யாராவது பொலித்தீன் பைகளை [அங்காடி பைகளை] பாவிக்க விரும்பினால், இப்போது ஒரு ரூபாவுக்கு விற்கப்படும் பைகள் ரூபா 12 க்கும் சாப்பாடு பொதி செய்யும் பொலித்தீன் ரூபா 10 க்கு வாங்க வேண்டி ஏற்படும். இந்த தடை இரவோடு இரவாக நேரடியாக தொழில் புரியும் 45 ஆயிரம் பேரையும் அத்துடன் மறைமுகமாக தொழிலில் ஈடுபடும் 3 இலட்சம் பேரையும் வேலை இழப்பதில் வந்து முடியும்.
இப்புதிய மனிதாபிமானமற்ற பொலித்தீன் தடையானது 345,000 பேரினது வாழ்வாதாரத்தை இரவோடு இரவாக இல்லாமல் செய்வதுடன் மூன்று இலட்சம் குடும்பங்களை அவல நிலைக்கு தள்ளும். பரந்த HDPE ன் பொலித்தீனின் பாவனை தடையானது, சில்லறை பொருளாதரத்தை மட்டுமன்றி ஏற்றுமதி துறையையும் பாதிக்கும் – HDPE பொலிதீன் ஆடை ஏற்றுமதிகள், பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறி ஏற்றுமதிகளில் 25% பாவிக்கப்படுகின்றது. சில்லறை துறையில், HDPE வீதியோர விற்பனையாளர்களில் இருந்து சிறப்பங்காடிகள் வரை [சுப்பர் மார்கெட்] சிறிய மட்டத்தில் பாவிக்கப்படுகிறது. பொலித்தீன் கழிவு சேர்த்து அகற்றுவதில் பெரும் பங்கு வகிப்பதால், தேசிய ஆரோக்கிய சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இவை தான் பொலித்தீனை தடை செய்வதில் ஏற்படப் போகும் விளைவுகள். உலகிலுள்ள எந்த ஒரு நாட்டிலும் HDPE பொலித்தீன் இவ்வாறு தடை செய்யப்பட்டது கிடையாது. அவர்கள் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்களே தவிர முழுமையான தடை விதிக்கவில்லை. நாங்கள் கேட்பது என்னவென்றால் இந்த HDPE கைத்தொழில் இருந்து மீட்சிபெற எங்களுக்கு ஐந்து வருடகால அவகாசத்தை கொடுக்கும்படி வேண்டுகிறோம். இக் காலஅவகாசத்தில் நாம் எமது கடன்களை அடைத்து புதிய தொழில்நுட்பத்திற்கு மாறிவிடுவோம். இப்பொழுது இந்த HDPE பொலித்தீன் தடைக்கு இதைவிட சாத்தியமான பரிகாரம் கிடையாது.
முன்வைக்கப்பட்டுள்ள மாச்சத்து அடிப்படையாக கொண்ட இயற்சிதைவு திறன் கொண்ட பிளாஸ்டிக் தொழில்நுட்பத்திற்கு பதிலாக குறைவான ஆகு செலவை கொண்ட ஒக்சோ- இயற்சிதைவு திறன் கொண்ட பிளாஸ்டிக்கை இலங்கையில் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறோம் அவை நான்கு மடங்கு ஆகு செலவில் குறைவானவை. நாங்கள் எமது செலவில் பிரித்தானிய நிபுணர்களை நாட்டிற்கு வரவழைத்து எமது உள்நாட்டு சுற்றாடல் அதிகாரிகளுக்கு இதை தெளிவுபடுத்த முயற்சிகள் மேற்கொண்டோம். ஆனால் அவர்கள் நிபுணர்களை காண்பதற்கு மறுத்து விட்டனர்
நாங்கள் அண்மையில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இந்த பிரச்சினையை பிரஸ்தாபித்து அவர் எமது நிலையை நன்கு விளங்கிக்கொண்டு தனது கவலையை தெரிவித்தார், இது எமக்கு ஒளிக்கீற்றை காட்டியது போலாகும். அமைச்சர் பதியுதீன் இப்பிரச்சினை பற்றி கூறும் போது இதற்கான மூல காரணம் அவராக இல்லாதுஇருந்த போதும் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் என்ற முறையில் தொழில் இழப்பு மற்றும் ஏற்றுமதி ஏற்படும் தாக்கம் பற்றி கரிசனை அடைவதாக கூறினார். அவர் கூறியதாவது. ‘ இந்த தடையில் எனது பங்களிப்பு எதுவும் இல்லை. ஆனால் இந்த குறையின் வெற்றிக்காக முன்வந்து ஒத்துழைப்பதற்கு தயார். சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பாவனைக்கு ஊக்கம் கொடுக்கப்படலாகாது. ஆனால் அவை படிப்படியாக அகற்றப்படல் வேண்டும் இந்தத்தடை இத்துறையில் உள்ளவர்களுடன் கலந்து ஆலோசிக்காது திடீர் என எடுக்கப்பட்ட நடவடிக்கை போல் தெரிவதாக கூறினார்.
அதன் பின்னர் அமைச்சர் பதியுதீன் உயர் அதிகாரிகளிடம் விசாரிக்கும் படி கூறியதுடன் உடனடியாகவே பல அமைச்சர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்தை கேட்டு அறிந்தார்.
மிக முக்கியமாக, அமைச்சர் பதியுதீன், அமைச்சரவை பொருளாதார முகாமைத்துவ குழுவிற்கும் கைத்தொழில் பிரதி நிதிகளுக்கும் [CCEM] இடையில் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 11 திகதி காலை ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார், அமைச்சரவை பொருளாதார முகாமைத்துவ குழுவின் தலைவராக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க செயல்படுகிறார். கடந்த மாதம் இலங்கையின் மத்திய சுற்றாடல் அதிகார சபை [CEA] சாப்பாடு பொலித்தீன் பொதி, அங்காடி பொலிதீன் பொதி மற்றும் ரேஜீபோம் ஆகியவற்றின் பாவனை, உற்பத்தி, இறக்குமதி மற்றும் விற்பனை ஆகியவற்றை ஒரு புதிய சட்டத்தின் கீழ் செப்டெம்பர் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் தடை செய்தது. படிப்படியாக பொலித்தீன் பாவனையை குறைத்து முடிவில் இல்லாமல் செய்வதற்கு பல நடவடிக்கைகளை எடுத்து சுற்றாடலில் ஏற்படுத்தும் தாக்கத்தை தவிர்ப்பதற்கு ஜூலை 11 ஆம் திகதி அமைச்சரவை அனுமதியளித்தது.