பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

செட்டிகுளம் சர்ஜான் எழுதிய “இருட்டறை மெழுகுவர்த்தி”கவிதை நூல் வெளியீட்டு விழா!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

வெங்கலச்செட்டிகுளம் கலாசார அபிவிருத்தி பேரவையின் வெளியீடான செட்டிகுளம் சர்ஜான் (ஊடகவியலாளர்)  எழுதிய “இருட்டறை மெழுகுவர்த்தி” என்னும் தலைப்பிலான கவிதை நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் 04.12.2016 ஞாயிறு மாலை 03.30 மணிக்கு ஆண்டியா புளியங்குளம் முஸ்லிம் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

வெங்கலச் செட்டிக்குளம் உதவி பிரதேச செயலாளர், கே. முகுந்தன் தலைமையில் நடைபெறும் இவ் விழாவில், பிரதம விருந்தினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான  றிசாத் பதியுதீன் கலந்துகொள்ளவுள்ளதுடன் கௌரவ விருந்தினர்களாக தமிழறிஞர் கலாநிதி அகளங்கன் மற்றும் முன்னாள் உப பீடாதிபதி காவ்யபிமானி தாஜுல் உலூம் கலைவாதி கலீல், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம்,அமீன், விடிவெள்ளி ஆசிரியர் எம்.பி.எம்.பைரூஸ் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்துடன் முதன்மை விருந்தினர்களாக கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் அமீர் அலி மற்றும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தவிசாளரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதுடன், விசேட விருந்தினர்கள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான, சிவசக்தி ஆனந்தன், காதர்மஸ்தான், இஷாக் ரஹ்மான், நவவி, அப்துல்லா மஹ்ரூப்,ஆகியோரும் வட மாகாண அமைச்சரான சத்தியலிங்கம் உட்பட மேலும் பல மாகாணசபை உறுப்பினர்களும், கலை, இலக்கிய, கல்விசார் அதிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.unnamed-1

குறித்த கவிதை நூலில் யுத்தத்திற்கு பின்னரான மக்களின் அவலங்களும், அரசியல், கிராமம், காதல்,பெண்மை என பல கவிதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. தமிழ், முஸ்லிம் மக்களின் உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலான இந்த சிறிய முயற்சிக்கு தங்களது வருகையின் மூலம் தங்களது ஆதரவை வழங்குமாறு நூலாசிரியர் வேண்டியுள்ளார்.unnamed-2

Related posts

கோத்தா 2வது தலைவர்! தீர்மானம் எதும் இல்லை – உதய கம்மன்பில

wpengine

மன்னார் சவேரியார் தேசிய பாடசாலை மாணவன் முதலிடம்

wpengine

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் பிரியாவிடையும்,பரிசளிப்பு விழாவும்

wpengine