பிரதான செய்திகள்

செட்டிகுளத்தில் இருந்து வவுனியாவுக்கு மாடு கடத்தல்! பொலிஸ் முறியடிப்பு

செட்டிகுளத்திலிருந்து வவுனியாவிற்கு கொண்டு செல்ல இருந்த மாடும்  வாகனமும் இன்று காலை 6.30 மணியளவில் நெளுக்குளம் பொலிசாரால் முறியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

நெளுக்குளம்  பாடசாலைக்கு முன்பாக இன்று காலை 6.30 மணியளவில்  சிறிய ரக லொறி வாகனத்தை மறித்து சோதனையிட்ட போது   சட்டவிரோதமான முறையில் மாடு கடத்திச்செல்லப்பட்டதை  அறிந்து கொண்ட பொலிசார் சோதனை செய்த போது ஆவணங்கள், போக்குவரத்து ஆவணங்கள், மாடுகள் பெறப்பட்ட உரிமையாளர்களின் ஆவணங்கள், ஏதும் இன்றி சட்டவிரோதமான முறையில் வவுனியாவிற்கு  மாடு கடத்தில்செல்லது முறியடிக்கப்பட்டது.

மாடு, வாகனம் அத்துடன்  வாகனச்சாரதியையும், உதவியாளரையும் கைது செய்ததுடன் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நெளுக்குளம் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

வாக்குறுதியை நிறைவேற்றினார் வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன்

wpengine

டெனிஸ்வரனுக்கும் ஜப்பானிய தூதுவருக்குமிடையில் விசேட சந்திப்பு

wpengine

இம்தியாஸ் பாக்கீா் மாக்காாின் ”இதயம் பேசுகிறது” வெளியீட்டு விழா

wpengine