Breaking
Sun. Nov 24th, 2024

தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகவும் முஸ்லிம்களின் எதிர்ப்பையும் பெற்றுவரும் விடயம் தொடர்பில் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

அண்மையில் சூரியன் FM வானொலி அறிவிப்பாளினி ஜீவ ரூபி என்கிற பெண்மணி இஸ்லாமிய முகமனாக கூறப்படும் சலாத்தை அவமதிக்கும் வகையில் (அஸ்ஸலாமு அலைக்கும்) என்ற வாசகத்தை Delete பன்னுங்க என்று கூறிய விடயமானது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல் முஸ்லிம்கள் மத கலாச்சாரம் என்பவற்றை புறக்கணிக்கும் செயலாகும். இதன் விளைவாக முஸ்லிம்கள் மத்தியில் பாரிய மனத்தாக்கத்தை உண்டு பன்னியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

நடுநிலை வகிக்க கூடிய ஊடகம் ஒரு சமூகத்தின் மத நம்பிக்கை வழிபாட்டு விடயத்தை நிந்திப்பதை அனுமதி வழங்கியது போல் குறித்த ஊடகம் இன்னும் மௌனம் சாதிப்பது ஏற்புடையதல்ல இதனால் மேலும் வெறுப்பை உண்டுபன்னுகிற செயற்பாடாக குறித்த விடயம் மாறிவருகிறது என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் அஹமட் புர்க்கான் JP தமது கட்சியின் சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்.

இன்று பெரும்பாலான இலத்திரனியல் ஊடகங்களின் பெரும் வருமானத்தை உறுதிசெய்வது முஸ்லிம் வர்த்தக நிலையங்களின் விளம்பரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது அவ்வாறு முஸ்லிம்களின் விளம்பரப் பணத்தில் வயிறு கழுவும் இவர்கள் முஸ்லிம்கள் உயர்வாகவும் வணக்க வழிபாடுகளில் ஒன்றாக கருதும் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற வாசகத்தை அவமறியாதையாக கொச்சைப்படுத்திய சூரியன் FM உடனடியாக மன்னிப்புக் கோரவேண்டும் இல்லாவிடின் குறித்த பெண் அறிவிப்பாளினியை பணிநீக்கம் செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால் முஸ்லிம்களின் வர்த்தக மற்றும் எந்த விளம்பரங்களும் சூரியன் FM வானொலிக்கு வழங்கப்படக்கூடாது எனவும் முஸ்லிம்கள் சூரியன் FM அலைவரிசையை புறக்கணிப்பது மாத்திரம் அல்லாமல் வர்த்தக விளம்பரங்கள் எதுவும் கொடுக்கவேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

vanni

By vanni

Related Post

One thought on “சூரியன் FM வானொலி மன்னிப்பு கேட்க வேண்டும்! ஜீவ ரூபி பணிநீக்கப்பட வேண்டும்”
  1. ஸலாத்தின் மகிமை தெரியாமல் தவறுதலாக பேசிய மாற்று மத சகோதரிக்கு இவ்வளவு எதிர்ப்பு எண்டா, அந்த FM இந்த FM என்டு call எடுக்குற நம்மிட #பாத்திமா கு ஒரு முடிவு இல்லையா மக்காள்

    #copied

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *