பிரதான செய்திகள்

சூரியன் செய்தியில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் எதிரியா?எதிலியா?

கடந்த சனிக்கிழமையன்று காலை 6.45 சூரியன் செய்திகளில் ஒலிபரப்பான கல்கிஸ்ஸையில்“மியன்மார் ஏதிலி”களுக்கு எதிரான போராட்டம் என்ற விடயம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த செய்தியில் கூறப்பட்ட “ஏதிலிகள்” என்ற சொல் நாடு உட்பட்ட எதுவுமே அற்ற நிலையில் அகதிகளாக உள்ளவர்களை குறிக்கும் சொல்லாகும்.

இது ஒரு தூய தமிழ் சொல் என்பதுடன் செய்தித்தாள்களிலும் வழக்கமான சொல்லாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் குறித்த சூரியன் செய்தியை கேட்டதாக கூறும் ஒரு சிலர், சூரியன் செய்தியில் “மியன்மார் எதிரிகள்” என்று கூறியதாகவும் அது இனவாத நோக்கத்தை கொண்டது என்றும் விமர்சித்துள்ளனர்.

எனினும் குறித்த சொல்லாடலில் சூரியன் செய்தி தயாரிப்பிலோ அல்லது வாசிப்பிலோ எந்த பிழைகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டோம்.
சூரியன் செய்தியை தயாரித்தவரும் ஏதிலிகள் என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளார்.

வாசித்தவரும் ஏதிலி என்ற சொல்லை தெளிவாகவே உச்சரித்துள்ளார்.
எனினும் தொடர்ந்தும் இந்த விமர்சனம் “பேஸ்புக்” பக்கங்களில் தொடர்வதால் அதனைப்பற்றி தெளிவாக்கவேண்டிய அவசியம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

சூரியன் செய்திகளை பொறுத்தவரையில் ஒருபோதும் அது தமிழ்பேசும் மக்கள் என்ற அடிப்படையில் தமிழ் மக்களையோ முஸ்லிம் மக்களையோ முரண்படும் வகையில் செய்திகளை தயாரித்ததில்லை.

எந்த ஒரு இஸ்லாமிய நிகழ்வுகள் வரும்போதும் அதனை முந்திக்கொண்டு நேயர்களுக்கு வழங்கவேண்டும் என்பதில் சூரியன் செய்திகள் எப்போதும் பின்நின்றதில்லை.

இந்தநிலையில் சூரியன் வானொலிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, முழுமையாக சூரியன் வானொலிக்கு சேறுபூசும் பிரசாரமாகவே கருதவேண்டியுள்ளது.
எனவே இதனை எமது நேயர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறோம்.

Related posts

பணிப்பகிஸ்கரிப்பு முடிவு! இணைந்த நேர அட்டவணை விரைவில் அமுல்படுத்தப்படும் – அமைச்சர் பா.டெனிஸ்வரன்

wpengine

கருணா புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

wpengine

மன்னார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர்கள் நியமனம்

wpengine