உலகச் செய்திகள்செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்து வீழ்ந்து 11 பேர் பலி..!

போரினால் பாதிக்கப்பட்ட சூடானின் வடகிழக்கில் பாரம்பரிய தங்கச் சுரங்கமொன்று பகுதியளவில் இடிந்து வீழ்ந்ததில் 11 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதோடு 07 பேர் காயமடைந்துள்ளதாக அரசாங்க சுரங்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூடானின் வடகிழக்கு செங்கடல் மாநிலத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள அட்பார மற்றும் ஹையா நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள ஹோவெய்டின் தொலைதூர பாலைவனப் பகுதியில் உள்ள ‘கிர்ஷ் அல்-ஃபில் சுரங்கத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் இடம்பெற்ற சமயம் பெருமளவிலான தொழிலாளர்கள் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்ததோடு அவர்கள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளனர்.

இச்சம்பவத்தை அறிந்த மீட்புப் பணியினர் அவசரமாக ஸ்தலத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்துள்ளனர். என்றாலும் 11 பேர் உயிரிழந்த நிலையிலும் ஏழு பேர் காயங்களுக்கு உள்ளான நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர். ஆபிரிக்க கண்டத்தில் தங்கம் உற்பத்தி செய்வதில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றான சூடானில் 2023 முதல் இராணுவத்திற்கும் துணை இராணுவக்குழுவுக்கும் இடையில் யுத்தம் இடம்பெற்றுவருவது தெரிந்ததே.

இவ்விபத்து சம்பவம் சூடானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அரப் நியூஸ்

Related posts

வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகளுக்கு, பார்வையாளர்களை சந்திக்க வாய்ப்பு!

Maash

முல்லைத்தீவில் முதல் முறையாக இலங்கை தேசிய புதியவர்கள் பிரிவினருக்கான சதுரங்க விளையாட்டுப் போட்டி!

Maash

மாரடைப்பு காரணமாக விவேக் வைத்தியசாலையில்

wpengine