(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலா கிராமத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த சுமார் 312 நபர்களின் 13 ஏக்கர் காணியை றஹீம் மௌலவி எனும் தனிநபர் என்பவர் சுவீகரித்துள்ளார் என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தாங்கள் முறைப்பாடு செய்துள்ளதாக குறித்த கர்பலா காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கர்பலா கிராமத்தில் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் காணி உரிமையாளர் ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.
2004ம் ஆண்டு தாங்கள் இந்த காணிகளை வாங்கினோம் காலத்திற்கு காலம் சுனாமிக்கு பிறகு உரிய முறையில் கட்டை போட்டு எல்லை போட்டு அடைத்தோம்.
ஆனால் கடந்த 3 மாதங்ககளுக்கு முதல் இந்த காணிகளின் கட்டைகளை பெக்கோ போட்டு தள்ளிவிட்டு ஒரு சில அரசியல்வாதிகளுடைய அடி வருடிகள் காணிகளை பிடித்து இருப்பதாக அறிகிறோம்.
ஆகவே உரிய அதிகாரிகள் இந்த விடயத்தில் கவனம் எடுத்து எந்த ஒரு பாரபட்சம் பார்க்காது கேப்பாப்புலவு,யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் சொந்தக் காணிகளை அந்தந்த மக்களுக்கு கொடுப்பது போல் இந்தக் காணிகளையும் எந்த தயவு தாட்சன்னியமும் பார்க்காது உரிய மக்களுக்கு காணிகளை தர வேண்டும்.
காத்தான்குடி பிரதேசதம் சன அடர்த்தியான பிரதேசமாக காணப்படுவதால் அந்தப் பிரதேசத்தில் இருந்து இந்த பிரதேசங்களுக்கு வந்து குடியேற வேண்டிய தேவை காணப்படுகின்றது.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து 5,6 தினங்கள் கடந்த போதிலும் எந்த ரீதியான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
ஆகவே உரிய நடவடிக்கைகளை ஒவ்வொரு தரப்பும் செய்வதோடு ,பிரதேச சபை,பிரதேச செயலகம் போன்றவை தயவு செய்து தங்களுடைய காணிகளை தருவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்னும் ஒரு சில காணி உரிமையாளரகள்; கருத்து தெரிவிக்கையில்
…………….
சுனாமிக்கு முற்பட்ட பகுதியில் அன்றாடம் கூலித் தொழில் செய்யக் கூடிய ,இடியப்பம் அப்பம் விற்கக்கூடிய அந்த தரத்திலுள்ள மக்களிடம் இருந்து மாதாந்தம் ஒரு கட்டுப் பணத்தின் அடிப்படையில் இந்தக் காணி கொள்வனவு செய்யப்பட்டது.
இரண்டு வருடங்களாக பணங்களை சேமித்து கொள்வனவு செய்த காணிகளை 2004 முழுமையாக உரிய உரிமையாளர்களுக்கு உறுதி எழுதப்பட்டு காணிகள் வழங்கப்பட்டிருந்தது.
அண்மைக் காலமாக மொத்தமாக இந்தக் காணிகளை எல்லை போட்டு இருக்கிறார்கள.
மிகவும் கஷ்டப்பட்ட ,வறுமைப்பட்ட மக்களின் காணிகள் என்பதாலும் காணிகளின் கடந்த 60 வருடத்திற்குரிய வரலாற்றுச் சான்றிதழ்,உறுதி போன்ற ஆவணங்களை இம் மக்கள் வைத்திருப்பதாலும் குறித்த காணிகளை இலகுவில் ஒரு தனி நபரால் சுவீகரிப்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
நாட்டிலுள்ள சட்டத்தின் அடிப்படையில் யார் இந்த காணிகளை சுவீகரித்து இருக்கின்றார்கள் ,இதற்கு துனை போகின்றவர்கள் யார் என்பதை தகவல் அறியும் சட்டம் ஊடாக எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இந்தக் காணியை 310 குடும்பங்களைச் சேர்ந்த காத்தான்குடி மக்கள் வாங்கி இருக்கின்றார்கள்.
அன்றாடம் தொழில் செய்கின்றவர்கள்,கூலித் தொழில் செய்கின்றவர்கள்,சமுர்த்தி உதவி பெறுகின்றவர்கள்,அரச ஊழியர்கள்,ஆசிரியர்கள் உள்ளிட்ட காணி உரிமையாளர்களுடைய குறித்த காணியை அரசியல் அதிகாரமுள்ள ஒரு சிலர்கள் காணியை அடைத்து இருப்பதாக கேள்ளிவிப்பட்டடோம்.
பிறகு நாங்கள் உரிய நபர்களிடம் தொடர்பு கொண்ட நேரம் உங்களுடை உறுதியை தாருங்கள் நாங்கள் பணம் தருகிறோம் என்றார்கள். அப்படி சில நபர்கள் காணி உறுதியை கொடுத்து விட்டு பணம் வாங்கி இருக்கின்றார்கள்.
அந்த தைரியத்தில் ஆரையம்பதி பிரதேச சபை மற்றும் செயலகத்தில் எந்தத் தொடர்பும் வைக்காமல் அவர்களின் சுய விருப்பத்தின் பேரில் அவர்களின் அரசியல் அதிகாரத்தைத் துஷ்பிரயோம் செய்து சட்ட விரோதமாக 312 ஏழை மக்களுடைய காணிகளை மிக அண்மையில் றஹீம் மௌலவி என்பவர் அடைத்துள்ளதாகவும்,அவரே காணிக்கு உரிமை கோருவதாகவும் பொலிஸார் தெரிவித்ததற்கமைய 70ற்கும் 80ற்கும் இடைப்பட்ட காணி உரிமையாளர்கள் கடந்த பெப்ரவரி மாதம் 27 திகதி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
எங்களுடைய காணிகள் முந்தி இருந்தது போன்று விடுவிக்க வேண்டும் இல்லாவிட்டால் நாங்கள் நீதி மன்றம் சென்று வழக்கு தொடர தயாராகவுள்ளதாகவும் காணி உரிமையாளர்கள் மேலும் தெரிவித்தனர்.