பிரதான செய்திகள்

சுவிஸ் ஒன்றியத்தின் வேண்டுகோள்! வைத்தியசாலையை புனரமைக்க! விந்தன் நடவடிக்கை

புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை மிகவிரைவில் நிவர்த்தி செய்ய வேண்டும் என வட மாகாண சபை உறுப்பினர் திரு.விந்தன் கனகரட்ணம் விடுத்த கோரிக்கையை, நிறைவேற்ற பணிப்பு.

வடமாகாண  சுகாதார சுதேசிய வைத்தியத்துறை அமைச்சின் 18 ஆவது ஆலோசனைக் குழுக் கூட்டம் 20.07.2017 அன்று சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தலைமையில் வட மாகாண சுகாதார அமைச்சில் நடைபெற்றது.

இதன்போது புங்குடுதீவுக்கான சுவீஸ் ஒன்றியத் தலைவர் சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களும், ஒன்றிய நிர்வாகிகளும்; வட மாகாணசபை உறுப்பினர் திரு. என்.விந்தன் கனகரட்ணம் அவர்களிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, அவர் புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தேவைப்பாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். அவையாவன:
போதிய ஆளணிகள் இல்லாமை. குறிப்பாக நிரந்தரமாக இன்னுமோர் வைத்தியரும், நிரந்தரமாக மருத்துவ தாதியர்களும் நியமிக்கப்பட வேண்டும், Minor Employee தேவையைப்  பூர்த்தி செய்ய வேண்டும் (ஆண் 02, பெண் 02). வைத்தியசாலையின் சமையல் அறை முற்றாக சேதமடைந்து பாவிக்க முடியாத நிலையில் உள்ளதால் அதனைப் புனரமைக்க வேண்டும்.  பெண்கள், ஆண்கள் விடுதிகளில் ஜன்னல்களுக்கான கம்பிகள், அலுமாரிகள், கட்டில்கள் அனைத்தும் மிகவும் பழமையானதாக துருப்பிடித்த நிலையில் உள்ளதனால்; அவைகளைப் புதிதாக வாங்கி வழங்க வேண்டும், அதே வேளை நிலமும் புனரமைக்கப்பட்டு, போதியளவு சமையல் பாத்திரங்களும் வழங்கி, கிணறு இறைத்து சுத்தப்படுத்தி,  குப்பைகள் எரிப்பதற்கான Incinerator > Labor Ward – தளபாடங்கள் (மரத்தளபாடங்கள்) வழங்கப்படுவதுடன்,  Main Gate புனரமைக்கப்பட வேண்டும் என  தேவைப்பாடுகள்  குறைபாடுகள் திரு. என். விந்தன் கனகரட்ணத்தினால் சுட்டிக்காட்டப்பட்டன.

இதனையடுத்து சுகாதார அமைச்சர் அவர்கள் சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர். கேதீஸ்வரன் அவர்களை உடனடியாக சுகாதார அமைச்சின் குழுவினரை அங்கு நேரடியாகப் சென்று பார்வையிட்டு, கள ஆய்வு செய்து அனைத்துக் குறைகளையும், தேவைகளையும் கண்டறிந்து பூர்த்தி செய்யும்படி பணித்துள்ளார்.

புங்குடுதீவு கிராமமானது  பன்னிரெண்டு வட்டாரங்களையும் பன்னிரெண்டு கிராம அலுவலகர் பிரிவுகளையும் கொண்ட சுமார் 1150 குடும்பங்களை உள்ளடக்கிய 5100 அங்கத்தவர்கள் வாழ்ந்து வரும் கிராமமாகும்.
அக்கிராமத்தில் இயங்கிவரும் இவ் மருத்துவமனையினை போதியளவு அடிப்படைப் பௌதிக வளங்களுடன் வைத்திருப்பது மிகவும் முக்கியமானதான ஒன்றாகும். அதன் அடிப்படையிலேயே இக் குறைகளைத் தீர்பபதற்கான உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பேஸ்புக் தொடர்பில் வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் 1100 முறைப்பாடுகள்

wpengine

மாவடிப்பள்ளியில் நடந்தது என்ன..?

wpengine

அரசுக்கு எதிராக திரண்ட ஆயிரக்கணக்கானோர்: ஈராக் பாராளுமன்றம் சூறை

wpengine