உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சுவிஸில் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து “புளொட்” அமைப்பின் மேதின ஊர்வலம் (படங்கள் இணைப்பு)

இன்று (01.05.2016) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்களும், முற்போக்கு முன்னணி அமைப்புகளும் கலந்து கொண்டிருந்த மேதின ஊர்வலத்தில் கொட்டும் மழைக்கு மத்தியிலும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் (புளொட்) வழமை போன்று கலந்து சிறப்பித்திருந்தது.

இந்தவகையில் சுவிஸ்லாந்தில் நடைபெறுகின்ற மேதின ஊர்வலங்களில் கடந்த 33 வருடங்களாக தொடர்ச்சியாக கலந்து சிறப்பித்து வரும் “புளொட்” அமைப்பினர், இவ்வருடமும் கலந்து சிறப்பித்திருந்தினர். 7057fbde-4b72-464e-9529-00a213f668ac
இம்முறை மேதின ஊர்வலமானது சூரிச் கெல்வெத்தியா ப்ளாத்ஷ்க்கு அருகில் இருந்து காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி புர்கிலி பிளாட்ஸ் பெல்வியில் முடிவடைந்தது. இவ் ஊர்வலத்தில் கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள்  கலந்து கொண்டிருந்தனர்.2b6c699f-8840-4005-8882-86cb9c8d0551
மேற்படி மேதின ஊர்வலத்தின் நிறைவில் புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளைத் தோழர் ஜூட் அவர்களின் நன்றியறிவித்தலுடன் மேதின நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது. அத்துடன் சுவிஸ் புலிகள் அமைப்பின், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சார்பிலும் இந்த ஊர்வலத்தில் தமிழர்கள் பங்கேற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. c6d3f57f-f084-4ea5-90f7-814dbc228bc1

Related posts

உலகில் இஸ்லாமிய கிலாபத்துக்கு தடையாகவும், மத்திய கிழக்கை கொலைக்களமாகவும் உருவாக்கியவர்கள் யார் ?

wpengine

வடக்கு,கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை

wpengine

சமுர்த்தி வேலைத்திட்டம் 2ஆம் திகதி யாழ்ப்பாணத்தில்! பிரதமர் விஜயம்

wpengine