பிரதான செய்திகள்

சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்.

(எம்.ரீ. ஹைதர் அலி)

சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் நோக்கில் சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் அனுசரணையில் விஷேட கலந்துரையாடல் நிகழ்வு ஒன்று அன்மையில் மட்டக்களப்பு East Lagoon ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் ஹாபீஸ் நசீர் அஹமட் , கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் PSM. சார்ல்ஸ், சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகள், நட்சத்திர விடுதி நிருவாகிகள், முதலீட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.unnamed-6

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்தல், சுற்றுலாத்துறை மூலம் உள்ளூர் வருமானத்தை அதிகரித்தல், கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை மூலம் வேலைப்புகளை அதிகரித்தல், முதலீட்டாளர்களுக்கு பொருத்தமான இடமாக கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்தல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.unnamed-7

unnamed-5

Related posts

நாளை மன்னார் சாரதிகளுக்கு பி.சி.ஆர் பரிசோனை

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

சுமார் 200 இடங்களில் தேடியும் கிடைக்காத செவ்வந்தி, இந்தியாவுக்கு தப்பி சென்றிருக்கலாம்..!

Maash