(சித்திக் காரியப்பர்)
எனது நெருங்கிய உறவு முறைத் தம்பியானவரும் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களுடன் மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டவரும் குருணாகலில் வசிப்பவருமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் – முஸ்லிம் பிரிவின் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் அவர்கள் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ள கருத்துகளில் சில என்னை வெகுவாகப் பாதித்தன.
அதிக சிங்கள மக்கள் கொண்ட பிரதேசத்தில் வாழும் எனது தம்பி சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்று தனது அரசியல் இருப்பைப் பாதுகாக்கவா இவ்வாறு செய்துள்ளார் என எண்ணவும் தோன்றுகிறது.
எனது தம்பியின் இந்தக் கருத்துகளைப் படித்து மிக வேதனையடைந்தேன். எரியும் தீய்க்கு மண்ணெண்ணையை அல்ல இவர் பெற்றோலை அல்லவா ஊற்றியுள்ளார். காட்டிக் கொடுப்பை கச்சிதமாக அரங்கேற்றியுள்ளார்.
எனது நிலைப்பாட்டுடன் எனது தம்பியன் நிலைப்பாட்டை ஒப்பிடும் போது வெட்கித் தலைகுனிகிறேன்.
எனது தம்பி குறித்த சிங்களப் பத்திரிகைக்கு தெரிவித்தவற்றில் எனக்கு வெறுப்பை ஏற்படுத்திய கருத்துகளை இங்கு வெட்கத்துடன் பதிவிடுகிறேன். .
–ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.
1.முஸ்லிம் ஒருவராக நின்று நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், இன்று நாங்கள் இந்தப் புண்ணிய பூமியில் முஸ்லிம்கள் என்ற மூடத்தனத்தில் அன்று… இலங்கையர் என்ற எண்ணப்பாடுடனேயோகும்.
———————-
2.முஸ்லிம்களை அடிப்படைவாதிகள் என, சந்தர்ப்பவாத முஸ்லிம் அரசியலாளர்கள்தான் காட்டிக்கொடுத்திருக்கிறார்கள்.
———————-
3.இலங்கையில் முஸ்லிம்கள் தங்களது அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்கின்றார்கள் என்று மார்தட்டிச் சொல்லவிரும்புகிறேன்.
———————-
4.அரபு நாடுகளை விடவும் இந்நாட்டு முஸ்லிம்கள் மத சுதந்திரத்தில் முன்னணியில் நிற்கின்றார்கள்.
———————-
5.இந்நாட்டு முஸ்லிம்களின் பொருளாதாரம் சிங்கள நுகர்வோரிலேயே தங்கியுள்ளது. இதன் மூலம் தெளிவாவது என்னவென்றால், முஸ்லிம்கள் சிங்களவர்களினால்தான் உயிர் வாழ்கிறார்கள் என்பதுதானே?
———————-
6.சிங்களவர்கள் ஒன்றிணைந்து முஸ்லிம்களின் வியாபாரம் தொடர்பில் ஆர்ப்பாட்டம் நடாத்தினால் முஸ்லிம்களாகிய நாங்கள் பட்டினியில் சாக வேண்டியதுதான் என்பது மாபெரும் உண்மையல்லவா?
———————-
7.இந்த சிங்கள – முஸ்லிம் பிளவுக்கு முக்கிய காரணகர்த்தாக்களாக இருப்பவர்கள் யாரென்றால், ஆளும் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ள 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே.
———————-
8.புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோரிடமிருந்தும், ரோ அமைப்பிடமிருந்தும் இலஞ்சம் வாங்கிய சந்தர்ப்பவாத முஸ்லிம்கள் அரசியல்வாதிகளில் சிலர், இந்த இனவாதத் தீப்பிழம்பை ஏற்றுவதன் மிகமுக்கிய நோக்கம் என்னவென்றால், இந்நாட்டைப் பிளவுபடுத்துவதற்கே என்பதைச் சொல்லியாக வேண்டும்.
(நன்றி:- தமிழில் சிலோன் ருடே)