பிரதான செய்திகள்

சுத்தமான குடிநீரைப் பெற்றுத்தாருங்கள் ரிஸ்வி ஜவஹர்ஷாவிடம் நமுவாவ மக்கள் கோரிக்கை

(ரிம்சி ஜலீல்)

நிகவரட்டிய நமுவாவ பகுதியில் சுத்தமான குடிநீரைப்பெற்றுக்கொள்வது சம்மந்தமான கோரிக்கை நிகழ்வு ஒன்று நேற்று (25)  நிகவெரட்டிய நமுவாவ ரஹ்மானிய்யா ஜும்மாப் பள்ளியில் நடைபெற்றது.

சுத்தமான குடிநீரை தமது ஊருக்குப் பெற்றுத்தருமாறும் நீர் சம்மந்தமான குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்க்காக குழாய் கிணறு மற்றும் “ஏரோபிளான்ட்” குடிநீரை சுத்தம் செய்யும் கருவியைப் பெற்றுத்தருமாறு பள்ளித் தலைவர் மற்றும் ஊர் மக்கள் வேண்டிக்கொண்டதற்கிணங்க  ஸ்ரீ.ல.மு.கா மாகாணசபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா அது தொடர்பான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஸ்ரீ.ல மு.க மாகாணசபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா குளியாப்பிட்டிய பி. உ இல்ஹாம் சத்தார் நீர்வளங்கள் அமைச்சின் அமைப்பாளர் ஷாம் மௌலானா சமூக சேவையாளர் ராபி மற்றும் ஊர் மக்கள் பலரும் கலந்துகொண்டதுடனர்.unnamed-3

Related posts

கம்மன்பிலவுக்கு முஜிப் சவால்! இனவாதத்திற்கு பணம் கொடுத்தவர் மஹிந்த

wpengine

பேருவளை மர்ஜான் பலீலுக்கு தேசியப்பட்டியல்

wpengine

தமிழ் நாட்டில் கொரோனா அதிகரிப்பு நாளை மூடக்கம்-தமிழக அரசு

wpengine