பிரதான செய்திகள்

சுதந்திரக் கட்சியை சேர்ந்த பலர் தாமரை மொட்டுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

விற்பனை செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை என்றாவது ஒரு நாள் கட்டியெழுப்புவதற்காக அனைவரும் ஒன்றிணைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.


குமார வெல்கம தலைமையில் இன்று புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டதுடன் அந்த அதனை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


பண்டாரநாயக்க உருவாக்கியை கட்சியை சந்திரிகா குமாரதுங்க பாதுகாத்து கொடுத்தார்.2015 ஆம் ஆண்டு வரை கட்சி பாதுகாக்கப்பட்டது. எனினும் தற்போது அது மாறியுள்ளது.


கட்சியை காட்டிக் கொடுத்தன் காரணமாகவே அதனை எதிர்த்து 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவை விட்டு விலகி சென்றேன். சந்திரிகாவின் ஆசியுடன் இன்றைய தினம் இந்த புதிய கட்சி ஆரம்பித்துள்ளேன்.


தேர்தலின் போது அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதன் மூலம் அரசாங்கத்தை ஆட்டி வைக்க சந்தர்ப்பம் கிடைக்கும்.
அரசாங்கம் பலவிதத்தில் பலமாக இருப்பதாக கூறினாலும் நாடாளுமன்றத்தில் அந்த நிலைப்பாட்டை மாற்றினர்.எதிர்காலத்தில் அரசாங்கத்தை மண்டியிட செய்ய பிசாசுடன் கூட இணைய வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட்ட இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்களது வாக்குகள் கிடைக்கும்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பலர் தாமரை மொட்டுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அரசாங்கத்திற்கு வலியை ஏற்படுத்த வேண்டுமாயின் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

Related posts

09 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் ஊரடங்கு

wpengine

வசந்தம் தொலைக்காட்சி ஊடகவியலாளர் இர்பான் வைத்தியசாலையில்

wpengine

SLMC & ACMC எம்.பிக்கள் இன்று இனவாதியுடன் யார் இந்த உதயகமன்வில?

wpengine