பிரதான செய்திகள்

சீருடை வவுச்சர் காலம் நீடிப்பு

அரசாங்க பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை பெற்றுக்கொள்ளும் வவுச்சர்கள் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் 30ஆம் திகதி வரை வவுச்சர்கள் செல்லுபடியாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் அறிவுறுத்தலுக்கு அமைய, வவுச்சர்களைப் பெற முடியாமல் போன மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள சிரமத்தை கருத்திற் கொண்டு, சீருடை வவுச்சர்களின் காலம் நீடிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுச்சர் கடந்த டிசம்பர் 31ஆம் திகதியுடன் காலவதியாகும் நிலையில், அதன் செல்லுபடியாகும் காலம் இந்த மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related posts

அத்துமீறும் வடமாகாண அரசியல் இனவாதிகள்: சாடுகிறார் விமல்

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

வவுனியா பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள கடைகளை அகற்றகோரி தமிழ் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

wpengine