பிரதான செய்திகள்

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் இலங்கை விஜயம்!

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபென்க் (Wei Fenghe), எதிர்வரும் 27ஆம் திகதி, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் அவர், எதிர்வரும் 29ஆம் திகதி மீண்டும் நாட்டிலிருந்து விடைபெற்று செல்லவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் போது அவர் இரு தரப்பு இராஜதந்திர நிரலுக்கமைவாக ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாதுகாப்பு துறைசார் முக்கியஸ்தர்களையும் சந்தித்து, சீன பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வவுனியாவில் 150 வீடுகளை ஒப்படைத்த லைக்கா ஞானம்

wpengine

பச்சை மிளகாய் ஒருகிலோ கிராம் 1,200 ரூபாய்க்கு விற்பனை

Maash

வட மாகாண 3 லட்சம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

wpengine