இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள சதொச களஞ்சியசாலைக்கு சீனி ஏற்றி வந்த கொள்கலனை சோதனையிட்டு விடுவித்த சுங்க அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார். சீனி ஏற்றி வந்த கொள்கலனிலிருந்து 218 கிலோ 600 கிராம் கொக்கேய்ன் கடந்த 19 ஆம் திகதி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. கிடைத்த தகவலொன்றின் பிரகாரம் நடத்திய தேடுதலின்போது இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். இதன் பெறுமதி 320 கோடி ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது. Post navigation இனவாதம் பேசும் சிறீதரனுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் வடமாகாண அமைச்சர் தொடர்பில் மன்னார் மக்கள் மன்ற அறிக்கை