(எம்.ரீ. ஹைதர் அலி)
இலங்கை நாட்டின் மத்திய கல்வியமைச்சின் ஏற்பாட்டில் சீனா நாட்டில் நடைபெறவுள்ள அதிபர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின், கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலையான ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எல்.எம். பைசல் அவர்கள் 2017.05.09ஆந்திகதி-செவ்வாய்க் கிழமை (இன்று) காலை 07:00 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சீனா நோக்கி புறப்பட்டார்.
சீனா நாட்டின் Jinhua, Zhejiang Province யிலுள்ள Zhejiang Normal University இல் Seminar On Primary and Secondary School Teachers from Development Countries – 2017 எனும் தலைப்பில் 2017.05.11 தொடக்கம் 2017.05.31ஆந்திகதி வரை நடைபெறவுள்ள அதிபர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காகவே சென்றுள்ளார்.
கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் கிழக்கு மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு முஸ்லிம் அதிபராக எம்.எல்.எம். பைசல் அவர்கள் காணப்படுகின்றார்.