பிரதான செய்திகள்

சீனாவில் காரியத்தில் கண்ணாக இருக்கும் ரணில்;ஹக்கீம்?

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)

இலங்கைக்கு உதவும் நாடுகள் வரிசையில் முஸ்லிம் நாடுகளின் வகிபாகம் மிக முக்கியமானது.இவ்வாறான உதவிகளை முஸ்லிம் நாடுகளிடமிருந்து இலங்கை நாடு தொடர்ச்சியாக பெற வேண்டுமாக இருந்தால் இலங்கை முஸ்லிம்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.

இன்று இலங்கை நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் செயற்பாடுகளை வெளியில் காட்டினால் நிச்சயம் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு வழங்கும் உதவிகளை நிறுத்தி கொள்ளும்.இன்று இலங்கை நாட்டில் முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிப்பது சர்வதேசம் வரை சென்றுள்ளது.

இலங்கை நாடு முஸ்லிம் நாடுகளிடமிருந்து உதவிகளை பெற இலங்கை முஸ்லிம்கள் எங்களுடனே உள்ளார்கள் என நிரூபிக்க வேண்டிய தேவை உள்ளது.அதற்கு இலங்கை முஸ்லிம் அரச தலைவர்கள் தன்னுடன் உள்ளார்கள் என நிரூபித்தால் அதுவே போதுமானது.

மர்ஹூம் அஷ்ரபினால் மு.காவானது சர்வதேசம் வரை பெயர் பெற்ற ஒரு கட்சியாகும்.அந்த கட்சியின் தலைவர் எங்களுடன் உள்ளார் என நிரூபித்தால் அது மிகப் பெரும் சான்றாகிவிடும்.தற்போது சீன சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மலேசியா பிரதமர் நஜீப் ரசாக்குடன் பேச்சு வார்த்தை நடாத்தியுள்ளார்.இதன் போது அமைச்சர் ஹக்கீமை அறிமுகம் செய்து மகிழ்ந்து கொள்கின்றனர்.

இங்கு அமைச்சர் ஹக்கீம் மூலமாக இலங்கை முஸ்லிம்கள் எங்கள் ஆட்சியுடனேயே உள்ளார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இலங்கை முஸ்லிம்கள் விற்கப்படுகிறார்கள் என்பதே உண்மையாகும்.இதற்கு அமைச்சர் ஹக்கீம் துணை போகிறார்.இது சர்வதேச நிகழ்வொன்று என்பதால் இன்னும் பல இடங்களில் இது போன்ற வியாபாரங்கள் இடம்பெறும்.இலங்கை நாட்டில் முஸ்லிம்களின் நிலைமை பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற வகையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது உலக முஸ்லிம் நாடுகளின் ஆட்சியாளர்களின் காதுகளினுள் இலங்கை முஸ்லிம்கள் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் வாழ்கின்றார்கள் என்ற செய்தியையே கொண்டு சேர்க்க வேண்டிய தேவை உள்ளது.அதற்கு அமைச்சர் ஹக்கீமின் இவ்வாறான பயணங்கள் தடையாக அமையும் என்பதே யதார்த்தமாகும்.வெளிநாட்டு முஸ்லிம் தனவந்தர்கள் கட்டிக் கொடுத்த நுரைச்சோலை வீட்டுத் திட்டம் இன்னும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது அமைச்சர் ஹக்கீம் இவற்றையாவது சாதித்து வருவாரா? சீனாவிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது காரியத்தில் கண்ணாக உள்ளார்;அமைச்சர் ஹக்கீம்..?

 

Related posts

சில இனவாதிகளினால் முஸ்லீம்கள் மீது இனவாத தீப்பந்து வீசுகின்றார்கள்

wpengine

அரசியல் பழிவாங்கல் பதவிக்காலம் நீடிப்பு -ஜனாதிபதி

wpengine

சதொச மோசடி கணனிமயப்படுத்தாமையே! காரணம் அமைச்சர் றிஷாட் (விடியோ)

wpengine