பிரதான செய்திகள்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொண்டால் இலங்கையில் சிறுநீரக நோய்

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொண்டால் இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது  நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சீனா தனது பயிர்ச்செய்கைக்கு அதிகளவில் இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதாகவும் இலங்கையை விட மூன்று நான்கு மடங்கு இரசாயன உரங்களை சீனா பயன்படுத்துவதாகவும் அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.  

தற்போதைய அரசாங்கத்தினால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், உரத்தை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேல் இன்று செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கலரியை பொதுமக்களுக்காக திறக்கப்படுவதை நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

wpengine

மீள்குடியேற்றத்தை தடுக்கவே! சிலாவத்துறை வைத்தியசாலை தேவைகளை தீர்க்காத மாகாண சபை

wpengine

மின்கட்டணம்கால அவகாசம்! மார்ச் மாதம் 31

wpengine